ஒருமுறை முதலீடு… மாதம்தோறும் பணம் ரிட்டர்ன்! SBI-ல் இந்த டெபாசிட் ஸ்கீமை கவனித்தீர்களா?

ஒன்றரை லட்சம் ரூபாயை மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் எனில், அதற்கான வட்டி விகிதமாக 5.3% வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, முதலீட்டாளர்கள் அசலுக்கான மாதத் தவணை மற்றும் அதன் வட்டி ஆகியவற்றை சேர்த்து, மூன்று வருடங்களுக்கு மாதந்தோறும் 4,500 ரூபாயை பெறுவர்.

SBI bank Tamil News 10 easy steps open FD account via online in SBI bank

பாரத ஸ்டேட் வங்கியின் டெபாசிட் திட்டம் ஒன்றின் மூலம், முதலீடு செய்யப்பட்ட தொகையை, அதன் வட்டி வருவாயுடன் மாதத் தவணையாக திரும்பிப் பெறுவது குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.

பாரத ஸ்டேட் வங்கி, பல டெபாசிட் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நீங்கள் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் தொகையை, மாதத் தவணைகளாக, பாரத ஸ்டேட் வங்கி முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால், இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தில் எவ்வித தொகையும் அளிக்கப்படுவதில்லை. மேலும், இத்திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வட்டி மானியமானது, மாதத் தவணையுடன் காலாண்டு இறுதியிலோ மாதத் தவணையின் போதோ செலுத்தப்படும். இந்த திட்டமானது, வருடாந்திரமாக அல்லது வாழ்நாள் முதலீடாக கூட வங்கியால் ஏற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவோர், குறைந்தது மாதத் தவணையாக ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். இதன் அடிப்படியில், குறைந்தது மூன்று வருடங்களுக்கு வைப்புத் தொகையாக ரூ.36,000 செலுத்த வேண்டும். வருடாந்திர வைப்பு நிதியானது மூன்று, ஐந்து, ஏழு ஆண்டுகள் என்ற காலவரையறையில் உள்ளது.

இத்திட்டத்தில், குடியுரிமைப் பெற்ற அனைவரும் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் வட்டி விகிதமானது, முதலீட்டாளர்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலீட்டு காலவரையறைகளைப் பொருத்து அமையும். மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம், பிற முதலீட்டாளர்களை காட்டிலும் அதிகமானதாக வழங்கப்படும்.

உதாரணமாக, ஒன்றரை லட்சம் ரூபாயை மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் எனில், அதற்கான வட்டி விகிதமாக 5.3% வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, முதலீட்டாளர்கள் அசலுக்கான மாதத் தவணை மற்றும் அதன் வட்டி ஆகியவற்றை சேர்த்து, மூன்று வருடங்களுக்கு மாதந்தோறும் 4,500 ரூபாயை பெறுவர். முதலீட்டாளர்கள், இத்திட்டத்தில் சேர்வதற்கு முன், எஸ்.பி.ஐ நிர்வாகிகளை அணுகி, தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi annuity deposit features interest rate calculator and other details to know

Next Story
8 வங்கிகள் இணைப்பு: உங்க அக்கவுன்டில் என்னென்ன மாற்றங்கள்? உடனே பாருங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com