SBI Annuity Deposit Scheme features : இந்த அன்னுய்ட்டி டெபாசிட் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ. 25,000 முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமோ அவ்வளவு டெபாசிட் செய்து கொள்ளலாம். அதற்கு உச்ச வரம்பு என எதுவும் இல்லை.
முதிர்வடையும் காலம்
இந்த டெபாசிட் திட்டம் மூன்று ஆண்டுகள், 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள், மற்றும் 10 ஆண்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி
36, 60, 84 மற்றும் 120 மாதங்களுக்கான திட்டங்களில் வட்டிக்கான மாற்றங்கள் ஏதும் இல்லை. மூன்று முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டி 6.25% மட்டுமே. அதே போன்று 5 முதல் 10 வருடங்களுக்கும் அதே அளவில் வட்டி வழங்கப்படுகிறது. இதர டெபாசிட் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் அதே வட்டி விகிதம் தான் இந்த திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது.
ப்ரீமெச்சூர் பேமெண்ட்
இந்த திட்டத்தின் காலம் முடிவடைவதற்கு முன்பே வாடிக்கையாளர் இறந்துவிட்டால் மட்டுமே ப்ரீமியம் ப்ரீமெச்சுர் அடையும் என்று எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதர வசதிகள்
இந்த டெபாசிட் திட்டத்திற்கு நாமினிகளை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போன்று இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தில் 75% மதிப்பை நீங்கள் லோன் மூலமாக பெற்றுக் கொள்ளவும் வழி வகை செய்கிறது இந்த திட்டம்.
மேலும் படிக்க : குழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது?
ஒருமுறை நீங்கள் 'பல்க்காக’ பணம் டெபாசிட் செய்தால் உங்களுக்கு மாதத்தவணை முறையில் பிரின்சிபல் அமௌண்ட்டில் இருந்து கொஞ்ச பணமும், வட்டியில் இருந்து கொஞ்ச பணமும் உங்களின் கையில் கிடைக்கும். இதனால் என்ன பலன் என்று யோசிக்கின்றீர்களா? நீங்கள் செலுத்தும் பணம் ஸ்பிலிட் செய்யபப்ட்டு மாதத்தவணை முறையில் 'வட்டியுடன்’ கிடைக்கும். இந்த கூடுதல் வட்டியால் உங்கள் மாத செலவினை பற்றாக்குறையின்றி மேற்பார்வையிடலாம்.