Advertisment

SBI வாடிக்கையாளரா நீங்க?. இதோ மாதாந்திர வருமானம் தரும் வைப்பு நிதி திட்டம் உங்களுக்காக ...

Sbi annuity deposit scheme : நிலையான மாத வருமானம் பெற விரும்பும் மக்களுக்காக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் தான் வருடாந்திர வைப்பு திட்டம் (Annuity Deposit).

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi annuity deposit scheme, monthly income, monthly income plans, fds, post office monthly income scheme, mis funds, insurance, insurance annuity plans, pension plans, lic

sbi annuity deposit scheme, monthly income, monthly income plans, fds, post office monthly income scheme, mis funds, insurance, insurance annuity plans, pension plans, lic

நிலையான மாத வருமானம் பெற விரும்பும் மக்களுக்காக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் தான் வருடாந்திர வைப்பு திட்டம் (Annuity Deposit). ஒரே முறையாக ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துவிட்டு இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் மாத வருமானம் பெறலாம். தங்களது சேமிப்பை மாத வருமானத்துக்கு துணையாக பெற வேண்டும் என நினைக்கும் மக்களுக்கு ஏற்றது இத்திட்டம்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

வருடாந்திர வைப்பு திட்டத்தில்(Annuity Deposit) வைப்பு கணக்கு துவங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

வைப்புத்தொகை (Deposit amount)

இந்த திட்டத்தில் எந்த வித அதிகபட்ச வரம்பும் இல்லாவிட்டாலும் கணக்குதாரர்கள் குறைந்தது ரூபாய் 25,000/- வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

கால அளவு (Tenure)

3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் என பல்வேறு முதிர்வு தேர்வுகளோடு இந்த வைப்புத் திட்டம் வருகிறது. வைப்பு கணக்குதாரர்கள் தங்களுக்கேற்ற கால அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வட்டி விகிதங்கள் (Rate of interest)

இந்த திட்டத்துக்கு பொருந்தும் வட்டி விகிதம், பருவம்/நிரந்தர வைப்பு (tenure/fixed deposit) போன்றவற்றுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்துக்கு ஒப்பானது. சமீபத்திய திருத்தப்பட்ட நிரந்தர வைப்பு விகிதங்களின்படி, ஒன்று முதல் 10 வருடங்களுக்குள் முதிர்வாகும் வைப்பு தொகைகளுக்கு எஸ்பிஐ 6 சதவிகிதம் வட்டி வழங்குகிறது. அதேபோல் 36 மாதங்கள், 60 மாதங்கள், 84 மற்றும் 120 மாதங்கள் கொண்ட வருடாந்திர வைப்பு (Annuity Deposit) திட்டங்களுக்கு எஸ்பிஐ 6 சதவிகித வட்டி விகிதம் வழங்குகிறது.

திட்டம் முதிர்வதற்கு முன் பணம் எடுத்தல் (Premature Payment)

எஸ்பிஐ யின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி, வைப்பு கணக்குதாரருக்கு மரணம் ஏற்பட்டால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் திட்டம் முதிர்வதற்கு முன் பணம் எடுக்க அனுமதிக்கப்படும்.

பிற வசதிகள்

இந்த திட்டத்தில் வைப்பு கணக்குதாரர்கள் ஒரு நாமினேசன் (nomination) வசதியை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒரு வைப்புதாரராக அதிக பற்று அல்லது கடன் (over draft/loan) வசதியை 75 சதவிகிதம் வரை உள்ள மீதி தொகைக்கு பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment