SBI News: நாட்டின் தலைநகரான புது டெல்லியில் பல பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் ஒரு புதிய வகை ஏடிஎம் அட்டை மோசடிக்கு இரையாகியுள்ளனர் என்பது பரபரப்பாக வெளிபட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ பல ஏடிஎம் அட்டை குளோனிங் (ATM card cloning) சம்பவங்கள் டெல்லியில் நடைபெற்றுள்ளதை உறுதிபடுத்தியுள்ளதோடு அதில் மக்கள் பணத்தையும் இழந்துள்ளனர் என்று கூறுகிறது. அதிர்ஷ்டவசமாக கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இழந்த தொகையை வரும் நாட்களில் திருப்பி தருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எஸ்பிஐ ஏடிஎம் குளோனிங் (cloning) அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் பின்’ எண்ணை (PIN) தகுந்த கால இடைவெளியில் மாற்ற வேண்டும், பின் எண்ணை உள்ளீடு செய்யும் போது மற்றொரு கை மூலம் ATM/POS keypad ஐ மறைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு பரிவர்த்தனை எண்ணை (security transaction number) ஏடிஎம் அட்டை அல்லது வேறு எங்காவது எழுதி வைப்பதை விட மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களது பிறந்த தேதி மற்றும் திருமண நாள் ஆகியவற்றை பின் எண்ணாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்திகளை (SMS) தவறவிடாமல் இருப்பதற்காக வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண் புதுப்பிக்கப்பட்டுள்ளது (updated) என்பதை வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் அட்டை மற்றும் அவற்றின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். பின் எண்ணை வேறு யாருடனும் பகிரக் கூடாது என்றும், வங்கி ஏடிஎம் மில் பணம் எடுக்கும் போது ஏடிஎம் மையத்தின் உள்ளே வேறு யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வங்கி கணக்கு தொடர்பான இரகசிய விவரங்களை கேட்கும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்க கூடாது எனவும் வங்கி வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil