sbi atm charges state bank atm : ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் நலனுக்காக வங்கி கட்டணங்களை நிறுத்தி வைத்திருந்தது மத்திய அரசு. அந்த வகையில் 3 மாதங்கள் எந்தவித ஏ.டி.எம் கட்டணங்களும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படாத நிலையில், நாளை முதல் (ஜூலை 1) பழைய நிலைமையே அமலுக்கு வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கவனமாக இருங்கள்.
Advertisment
வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கூடுதலாக செலவிடவேண்டியிருக்கும். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
sbi atm charges state bank atm :ஏடிஎம்மில் இருந்து பணம் திரும்பப் பெறுதல்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் உள்ள தகவல்களின்படி, மெட்ரோ நகரங்களில், எஸ்பிஐ தனது வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதத்தில் 8 இலவச (8 free ATM Transactions) பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது. கூடுதலாக, அதன் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
5 பரிவர்த்தனைகள் எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 பரிவர்த்தனைகள் இதர வங்கிகளிலும் இலவசமாக மேற்கொள்ளலாம். அதன் பின்னர் எடுக்கும் பணத்துக்கு ஒரு முறைக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஊரடங்கு காலத்துக்கு முன்னர் இருந்த விதிமுறைகள் அப்படியே மீண்டும் அமலுக்கு வருகின்றன. அதாவது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கட்டணம் வசூலித்தனவோ, அதே கட்டணம் ஜூலை 1 முதல் மீண்டும் வசூலிக்கப்படும். இந்த கட்டண முறைகள் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil