எஸ்.பி.ஐ.-ன்னா சும்மாவா? 44 கோடி பேருக்கான இரட்டைச் சலுகை

State Bank Of India Tamil News: பிற வங்கி ஏடிஎம் களிலிருந்து கூட மூன்று மாதங்களுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்.

By: April 18, 2020, 7:56:05 PM

SBI ATM Charges: எஸ்.பி.ஐ இந்த கொரோனா காலத்தில் அறிவித்த இரட்டைச் சலுகை முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று ஏடிம் கட்டணம் தொடர்பானது. மற்றொன்று, சேமிப்புக் கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் தொடர்பானது. அவை தொடர்பான தகவல்களை இங்கே காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எஸ்பிஐ ஏடிஎம்களில் செய்யப்படும் அனைத்து ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணத்தை ரத்து செய்கிறது. இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அளவு கடக்கும் போது ஜூன் 30 வரை, பிற வங்கி ஏடிஎம் களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி தனது இணையதளத்தில் 15 ஏப்ரல் 2020 அன்று வெளியிட்டுள்ளது.

State Bank Of India Tamil News: ஸ்டேட் வங்கி ஏடிஎம் கட்டணம்

ஜூன் 30 வரை மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் எந்த வங்கி ஏடிஎம் களிலிருந்து வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் 24 ஆம் தேதி அறிவித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட வங்கியில் உள்ள டெபிட் அட்டை வைத்திருப்பவர்கள் பிற வங்கி ஏடிஎம் களிலிருந்து கூட மூன்று மாதங்களுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம், என நிதி அமைச்சர் கோவிட் -19 க்கான தொகுப்பை நாட்டுக்கு அறிவிக்கும் போது தெரிவித்தார்.

எஸ்பிஐ வழக்கமான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 8 இலவச பரிவர்த்தனைகளை வழங்குகிறது, இதில் 5 பரிவர்த்தனைகள் எஸ்பிஐ ஏடிஎம்களிலும் 3 பரிவர்த்தனைகள் பிற வங்கி ஏடிஎம் களிலும் செய்துக்கொள்ளலாம். மெட்ரோ அல்லாத நகரங்களில் இது போன்ற கணக்கு வைத்திருப்பவர்கள் 10 இலவச பரிவர்த்தனைகளை, 5 பரிவர்த்தனைகள் எஸ்பிஐ ஏடிஎம் களிலும், 5 பிற வங்கி ஏடிஎம் களிலும் செய்துக் கொள்ளலாம். அதற்கு பிறகு செய்யப்படும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைகளுக்கும் வங்கி ரூபாய் 20/- மற்றும் GST கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கும். அதுபோல நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 8/- மற்றும் GST கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கும், என வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, குறைந்தபட்ச மாதாந்திர இருப்பை (average monthly balance- AMB) பராமரிக்காமல் இருப்பதற்காக விதிக்கப்படும் கட்டணத்தை தனது ஒட்டுமொத்த 44.51 கோடி சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி செய்தது. மேலும் குறுஞ்செய்திக்கான கட்டணத்தையும் எஸ்பிஐ தள்ளுபடி செய்துவிட்டது.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi atm charges state bank of india tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X