sbi atm: வங்கி சேவையில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியின் ஏகப்பட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆன்லைன் பணபரிவர்த்தனை தொடங்கி, ஏடிஎம் பரிவர்த்தனை வரை வாடிக்கையாளர்கள் மறக்காமல் இந்த ரூல்ஸ்களை ஃபாலோ செய்தாக வேண்டும்.
அந்த வகையில், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் பயன் பெறும். எஸ்.பி.ஐ டெபிட் கார்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பழகத்தை நிச்சயம் வைத்திருப்பீர்கள்.
ஆனால் ஒருநாளைக்கு எவ்வளவு தொகையை உங்களால் எடிஎம்மில் எடுக்க முடியும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா? இதோ உங்களுக்காவே தெளிவான விளக்கம்.
எஸ்.பி.ஐ வங்கி அண்மையில் தங்களது ஏடிஎம் டெபிட் கார்டு பயனர்களின் தினசரி பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகக் குறைத்து அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு எல்லாம் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கப்படும் அடிப்படை டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே ஆகும்.
வங்கி நிறுவனங்கள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் டெபிட் கார்டுகளை விநியோகம் செய்து வருகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் 20,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கூடுதலான பணத்தினை ஏடிஎம்-ல் இருந்து எடுக்க வேண்டும் என்றால் கார்டின் வகையினை மாற்றுவது நல்லது.
எஸ்பிஐ வங்கியின் பிளாட்டினம் டெபிட் கார்டினை பயன்படுத்தும் போது ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஏடிஎம் மையங்களில் பணத்தினை எடுக்க முடியும்.
ஐசிஐசிஐ வங்கியின் பிளாட்டினம் சிப் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு 1,00,000 ரூபாய் வரை எடுக்க முடியும். இதுவே விசா சிக்னேச்சர் டெபிட் கார்டு என்றால் 1,50,000 ரூபாய் ஒரே நாளில் ஏடிஎம் மையங்களில் இருந்து பணத்தினை எடுக்கலாம்.
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... என்ன நீங்க தயாரா?
எச்டிஎப்சி வங்கி தங்களது பிளாட்டினம் சிப் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம்.