sbi atm sbi atm card sbi state bank atm card sbi : எ ஐசிஐசிஐ வங்கி, இப்போதெல்லாம் இயந்திரத்தில் உங்க கணக்கில் பணம் போட்டாலே அதற்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து வாடிக்கையாளர்களைத் தலைத்தெறிக்க ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் எஸ்பிஐ அப்படியே தலைகீழாக வாடிக்கையாளர்கலை குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் அதிகப்பட்சமாக நாள் ஒன்றுக்கு 3முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். அதே போல் 20 ஆயிரம் வரை மட்டுமே ஒரு ஏடிஎம் கார்டில் இருந்து எடுக்க முடியும். மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தினால் அதற்கு தனி சார்ஜ். மாதத்திற்கு 3 முறை இலவச பணப்பரிவர்த்தனை தீர்ந்த பின்பு அதற்கு தனி கட்டணம் என ஏகப்பட்ட விதிமுறைகள் இருந்தன. இது எல்லாமே பழசு கண்ணா பழசு. ஆனால் இனி....
எஸ்பிஐயில் கணக்கு வைத்திருப்பவர்கள் 25 ஆயிரம் ரூபாய் குறைவாக மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம். ரூ.25 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40 முறை ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். 1 லட்சம் அல்லது அதற்கு மேலே மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அன்லிமிடெட்டாக ஏடிஎம் சேவையை பெறலாம் என்று எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.