sbi atm sbi atm card sbi state bank atm sbi : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
Advertisment
எஸ்பிஐ டெபிட் கார்டுகள் மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
எஸ்பிஐ அக்கவுண்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான வழிமுறைகள் இங்கே.
உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் உங்கள் பான் எண்ணை இணைக்க, நீங்கள் பான் கார்டு நகலுடன் உங்கள் வங்கி கிளைக்கு செல்ல வேண்டும்.வங்கி கிளையில் வழங்கும் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பான் கார்டின் நகலுடன் சமர்ப்பிக்கவும்.
வங்கி அதிகாரி சரிபார்ப்பு பணிக்காக உங்கள் அசல் பான் கார்டையும் கேட்கலாம் என்பதால் அதையும் எடுத்து செல்வது நல்லது.சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் நீங்கள் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணில் வங்கியில் இருந்து எஸ்எம்எஸ் வரும். அதன் மூலம் உங்கள் பான் எண், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுவிட்டது என்ற தகவலை உறுதி செய்துகொள்ளலாம்.
ஆன்லைன் வழிமுறை:
* பின்னர் 'e-services' என்பதை கிளிக் செய்து PAN registration பொத்தானை அழுத்தவும்.
* இப்போது தோன்றும் பக்கத்தில் நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் பாஸ்வேர்டை உறுதி செய்யவும்.
* இதனை தொடர்ந்து Transaction Account என்பதை கிளிக் செய்து உங்கள் பான் கார்டு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
* நீங்கள் சமர்ப்பித்த பிறகு, ஒரு OTP உறுவாக்கப்பட்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
* OTP ஐ உள்ளிட்டு உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்
* உங்கள் பான் எண்ணை உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான உங்கள் கோரிக்கை வங்கி கிளைக்கு அனுப்பப்படும்.
* இதன் பின்னர் உங்கள் பான் எண் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டவுடன், வங்கி அதை உறுதிப்படுத்தி ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உங்களுக்கு தகவலை தெரிவிக்கும்.