/tamil-ie/media/media_files/uploads/2020/10/sbi-atm-7591.jpg)
sbi atm sbi bank atm state bank atm
sbi atm sbi bank atm state bank atm : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்களில் பணம் எடுக்க செல்லும் போது தோல்வியுற்ற பரிவர்த்தனை பிரச்சனையை நாம் பலமுறை சந்தித்திருப்போம். அப்போது நமக்கு இயந்திரத்தில் இருந்து பணம் கிடைத்திருக்காது, ஆனால் நமது வங்கி கணக்கில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வங்கியிலும் இதுகுறித்து ஆன்லைனில் புகார்களை அளிக்க ஒரு வலைத்தளம் உள்ளது. எனவே, தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு புகார் வலைத்தளத்தை கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்கள் தங்கள் புகாரை ஆன்லைனில் பதிவு செய்ய அனுமதிக்கிறது.
எஸ்பிஐ இணையதளத்தில் உள்நுழைந்து அதன் சிஎம்எஸ் வலைதள பக்கத்திற்கு செல்லவும்.அங்கு வாடிக்கையாளர் வகை, கணக்கு எண், புகார்தாரரின் பெயர், வங்கி கிளை எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, புகாரின் வகை, சேவைகள் மற்றும் புகாரின் தன்மை போன்ற விவரங்களை நிரப்பவும்.
இந்த விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பு பொத்தானை அழுத்தவும்.
இதனை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக நீங்கள் ஒரு புகார் எண்ணைப் பெறுவீர்கள். இதன் மூலம் உங்களது புகார் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் புகார் விசாரிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும். மேலும் உங்கள் புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழு தகவலும் உங்களுக்குக் கிடைக்கும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.