SBI ATM Rules: பொதுத்துறை வங்கிகளில் மிகச் சிறந்த வங்கி, எஸ்பிஐ வங்கி ஆகும். சிறந்த வாடிக்கையாளர்கள் சேவையை அது வழங்கிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் புதிய புதிய அறிவிப்புகள் அதனால் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் எஸ்பிஐ-யில் அக்டோபர் 1 முதல் எஸ்பிஐ யில் மாற்றம் செய்யப்பட்ட மிக முக்கியமான தகவலை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
எஸ்பிஐ-யின் அறிவிப்பில், வாடிக்கையாளரால் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது அது நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் .
எஸ்.பி.ஐ.வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது பெரு நகரம் அல்லாத பகுதிகளில் 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலவச பணபரிமாற்றங்களை கடந்த சேவைகளுக்கு, 5 முதல் 20 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். மேலும் கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம் 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வங்கியில், மாத சராசரி வைப்புத் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பராமரித்தால், கணக்கில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த அறிவிப்பு, அக்., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.