Advertisment

SBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா?

எஸ்.பி.ஐ மேலும் பல சலுகைகளை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI debit card, Magstripe Debit Card, SBI Deactivates Magstripe Debit Card

SBI ATM Rules: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது இந்தியாவில் மிகச்சிறந்த வங்கி சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அத்துடன் வாடிக்கையாளர்கள் இதுவரையில் சந்தித்து வரும் பிரச்சனையான ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான குறித்த புதிய அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது.

Advertisment

தற்போது மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கி ஏஎடிஎம்-களில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து வருகின்றனர். ஆனால் இனி குறைந்த பட்ச தொகையாக வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25000 மினிமம் வைப்புத்தொகையாக எஸ்பிஐ வங்கியில் வைத்திருப்பவர்கள் அதன் ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம். மேலும் 1லட்சம் அல்லது அதற்கு மேல் மினிமம் பேலன்ஸ் தொடர்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் எஸ்.பி.ஐ வங்கி மேலும் பல சலுகைகளை தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதாவது இருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்.

எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பேலன்ஸ் வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் மே 1-ம் தேதி முதல் 3.25 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment