scorecardresearch

வங்கியில் இருக்கும் சிறந்த சேமிப்பு திட்டங்கள்! தேர்ந்தெடுப்பது எப்படி?

3 மாதங்கள் ஊதியம் கணக்கில் டெபாசிட் ஆகவில்லை என்றால், இந்த கணக்குக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் திரும்பப் பெறப்படும்.

sbi bank account sbi bank account schemes sbi
sbi bank account sbi bank account schemes sbi

sbi bank account sbi bank account schemes sbi : இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, 5 ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த கணக்குகளில் சராசரி மினிமம் பேலனஸ் அல்லது சராசரி மாத மினிமம் பேலன்ஸை தொகைய வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவை சேமிப்பு கணக்குகளாக கருதப்படும். சேமிப்பு கணக்குகளுக்கான அதே வட்டி விகிதம் இதற்கும் கொடுக்கப்படும்.

1. ஊதிய கணக்கு (சேலரி அக்கவுண்ட்):

மாதம் தவறாமல் ஊதியம் பெறும் வாடிக்கையாளர்கள் இந்த கணக்கை தொடங்கலாம். பொதுவாக நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த ஊதிய கணக்கை தொடங்கிக் கொடுப்பது வழக்கம். எஸ்.பி.ஐயின் இந்த கணக்கில் மினிமம் பேலன்ஸ் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இலவச ஆன்லைன் பேங்கிங், ஏ.டி.எம் கார்ட், ஜாயின்ட் அக்கவுன்ட்டுக்கு கூடுதல் ஏ.டி.எம் கார்டு, எஸ்.பி.ஐ பவர் வசதி, இலவச கசோலைகள் வழங்கப்படும். தொடர்ந்து 3 மாதங்கள் ஊதியம் கணக்கில் டெபாசிட் ஆகவில்லை என்றால், இந்த கணக்குக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் திரும்பப் பெறப்படும். பின் நீங்கள் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இது ஒரு ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.

2. பேசிக் சேமிப்பு கணக்கு:

இந்த வகையான கணக்குகள், ஏழை எளியோர் பயன்பெற வழங்கப்படுகிறது. இதற்கு தகுந்த கே.ஒய்.சி சான்றுகள் வழங்கப்பட வேண்டும். இந்த கணக்கை தொடங்குவோருக்கு இலவசமாக ரூ-பே ஏ.டி.எம் கார்டு வழங்கப்படும். ஆண்டு பராமரிப்பு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. NEFT/RTGS சேவை மூலம் கட்டணம் இன்றி பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.

இந்த கணக்கு திறக்க நினைப்பவர்களுக்கு, வேறு சேமிப்பு கணக்குகள் இருக்கக் கூடாது. அப்படியே இருந்தால் 30 நாட்களுக்குள் அதை மூட வேண்டும். ஏ.டி.எம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கியில் நேரடி பரிவர்த்தனைகள் மூலம் மாதத்துக்கு 4 முறை மட்டுமே பணம் எடுக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.

3. சிறிய டெபாசிட் கணக்குகள்:

கே.ஒய்.சி சான்றுகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த கணக்கை தொடங்கலாம். ஆனால் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கே.ஒய்.சி சான்றுகள் சமர்ப்பித்த பிறகு பேசிக் சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் தான்ன். ஆனால் அதிகபட்சமாக 50 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

இலவசமாக ரூ-பே ஏ.டி.எம் கார்டு வழங்கப்படும். ஆண்டு பராமரிப்பு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. NEFT/RTGS சேவை மூலம் கட்டணம் இன்றி பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.

4. டிஜிட்டல் சேமிப்பு கணக்கு :

எஸ்.பி.ஐ வங்கியின் YONO ஆப்பின் மூலம் இந்த கணக்கை தொடங்க வேண்டும். கணக்கு திறக்கப்பட்டால், மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. ஒரே ஒருமுறை வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டியது இருக்கும். பிளாட்டினம் டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். இதுவும் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi bank account sbi bank account schemes sbi bank accounts sbi bank account interest sbi

Best of Express