SBI Bank Alert Tamil News: டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது நிறைய மோசடிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது மட்டுமல்லாமல், அறியப்படாத இணைய பக்கங்களில் இருந்து மொபைல் அல்லது வலை பயன்பாடுகளைப் பதிவிறக்கும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய வங்கிகள் வழக்கமான இடைவெளியில் எச்சரிக்கைகளை அனுப்பி வருகின்றன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பிற வங்கிகள் போன்ற வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
“ஆன்லைன் மோசடி செய்பவர்கள் குறித்தது எச்சரிக்கையாக இருக்கவும், எந்தவொரு முக்கியமான விவரங்களையும் ஆன்லைனில் பகிரவோ அல்லது அறியப்படாத மூலத்திலிருந்து எந்தவொரு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என்று நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறோம்” என்று எஸ்பிஐவங்கி அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
We advise our customers to be alert of fraudsters and not to share any sensitive details online or download any app from an unknown source.#StaySafe #StaySecure #BeAlert #CyberSecurity #CyberSafety #SBIAapkeSaath pic.twitter.com/jAQec1nmiG
— State Bank of India (@TheOfficialSBI) May 14, 2021
ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க நீங்கள் பின்பற்றக்கூடிய மற்றும் எஸ்பிஐ வங்கி பட்டியலிட்ட சில முக்கிய விபரங்ககளை இங்கு பகிர்ந்துள்ளோம்.
- பிறந்த தேதி, டெபிட் கார்டு எண், இணைய வங்கி பயனர் ஐடி / கடவுச்சொல், டெபிட் கார்டு சிவிவி எண், ஓடிபி போன்ற உங்கள் சான்றுகளை ஒருபோதும் பகிர வேண்டாம்.
- எஸ்பிஐ வங்கி, ரிசர்வ் வங்கி, அரசு அலுவலகங்கள், போலீஸ் , கேஒய்சி போன்ற மையங்களில் இருந்து அழைப்பதாக கூறி நடிப்பவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்கவும்.
- அறியப்படாத மூலங்களிலிருந்து தொலைபேசி அழைப்புகள் / மின்னஞ்சல்களின் அடிப்படையில் எந்த மொபைல் பயன்பாட்டையும் பதிவிறக்குவதைத் தவிர்க்கவும்.
- அறியப்படாத மூலங்களிலிருந்து மின்னஞ்சல்களில் பெறப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
- மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட கோரப்படாத சலுகைகளுக்கு எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் பதிலளிக்க வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)