SBI bank alert Tamil News: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை உருவெடுத்துள்ள நிலையில், தொற்று பரவலும், இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டு இருப்பதாலும், தொற்று குறித்த அச்சம் அதிகரித்துள்ளதாலும், ஏதேனும் பொருட்கள் வாங்க மக்கள் ஆன்லைனையை நாடுகிறார்கள். இதில் பெரும்பாலனவர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதால், கொள்ளை ஆசாமிகள் மோசடி செய்ய தயாராக உள்ளனர். அதிலும் குறிப்பாக மருந்துகள் வாங்க பயன்படுத்தப்படும் இணைய பக்கங்களில் அதிக மோசடி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மருந்துகளை வழங்கும் தொலைபேசி அழைப்புகளைப் பெறும் மக்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனது வாடிக்கையாளர்களை முறையாக சரிபார்த்து, எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ள எஸ்பிஐ வங்கி, இது போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களும் பணத்தை விரயம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது.
“கோவிட் மற்றும் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். மோசடி செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றும்படி கேட்டுக்கொண்டே உயிர் காக்கும் மற்றும் பிற மருந்துகளை வழங்குவதன் மூலம் மக்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கிறார்கள் என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த உரிமைகோரல்களை சரிபார்க்கவும், தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம். எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துவதற்கு முன்பு நீங்கள் கையாளும் பயனாளியின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உறுதிப்படுத்தவும்," ”என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Please ensure to verify the authenticity of the beneficiary you are dealing with before making any payment. pic.twitter.com/ilFFyseglP
— State Bank of India (@TheOfficialSBI) April 23, 2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.