SBI Bank ALERT Tamil News: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை ஆன்லைன் மோசடி கும்பலிடம் பறிகொடுத்து விட வேண்டாம் என்றும், ஆன்லைன் டிக்கெட்டுகள், ஹோட்டல்கள் போன்றவற்றை முன்பதிவு செய்யும் போது கவனமாக இருங்கள். உங்கள் அலட்சியம் உங்களை பணத்தை இழக்க வழிவகுக்கும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஆன்லைன் மோசடியை தவிர்ப்பதற்கான எளிய மற்றும் சிறந்த வழிகளை எஸ்பிஐ வங்கி பகிர்ந்துள்ளது.
இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி அதன் ட்விட்டர் பக்கத்தில், "கோடை விடுமுறைகள், குடும்பத்தில் வேடிக்கையான பயணங்களுக்கான நேரம். உங்கள் பாதுகாப்பை இந்த நேரத்தில் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை மனதில் வைத்து, விழிப்புடன் இருங்கள் மற்றும் #SafeWithSBI." என்று பதிவிட்டுள்ளது.
இப்போது, ஆன்லைன் மோசடியை தவிர்க்க சிறந்த வழிகளாக எஸ்பிஐ வங்கி பகிர்ந்துள்ளவற்றை இங்கு பார்க்கலாம்.
- இலவசம் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம்: நிதி பரிவர்த்தனைகளுக்கு இலவச பொது வைஃபையிலிருந்து விலகி இருங்கள்.
- புதிய இடங்கள் அதிக விழிப்புணர்வு: ஸ்வைப் மிஷினைக் கேளுங்கள். உங்கள் அட்டைகளை (டெபிட் மற்றும் கிரிட் கார்டுகளை) யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.
- இணைப்பைக் கிளிக் செய்தால், ஒரு சிமிட்டலில் அனைத்தையும் இழக்க நேரிடும்: பணம் செலுத்துவதற்கு அல்லது பகிர்வதற்கு முன் இணைப்புகளைச் சரிபார்க்கவும். மற்றும் உங்கள் வங்கி மற்றும் தனிப்பட்ட விவரங்களையும் சரிபார்க்கவும்.
இவற்றுடன், ஆன்லைன் மோசடிகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளையும், பணம் செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய படிகளையும் தொடர்ந்து பகிர்ந்துள்ள எஸ்பிஐ வங்கி, கூகுள் பே, பேடிஎம், ஃபோன்பே போன்ற ஏகப்பட்ட பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) அடிப்படையிலான பயன்பாடுகள் உள்ளன. இவை ஆன்லைனில் பணம் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல் போன்றவற்றுக்கு மக்களால் அன்றாட பயன்படுத்தப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில ஆன்லைன் கட்டண குறிப்புகளையும் வழங்கியுள்ளது.
ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் கிரைம்களைத் தவிர்ப்பதற்கான படிகள்:
- ஆன்லைனில் பணம் செலுத்தும் போது மட்டுமே மக்கள் யுபிஐ (UPI) பின்னை உள்ளிட வேண்டும்.
- பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது பணத்தை மாற்றுவதற்கு மட்டுமே தேவை. பெறுவதற்கு அல்ல. எனவே, பணம் அனுப்பும் முன் எண், பெயர் மற்றும் யுபிஐ ஐடியை எப்போதும் சரிபார்க்கவும்
- யுபிஐ பின்னை யாருடனும் பகிர வேண்டாம். நிதி பரிமாற்றத்திற்கு ஸ்கேனரைப் பயன்படுத்துவது சிறந்தது.
- உத்தியோகபூர்வ ஆதாரங்களைத் தவிர மற்றவற்றிலிருந்து தீர்வை நாட வேண்டாம். எந்தவொரு கட்டணத்திற்கும் பயன்பாட்டின் உதவிப் பிரிவைப் பயன்படுத்தவும். அல்லது தொழில்நுட்பச் சிக்கல் மற்றும் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால் வங்கியின் தீர்மானம் போர்டல் புகார் மூலம் தீர்வு காண வேண்டும் என எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Summer vacations are the time for fun-filled family trips. Do NOT take your security lightly during this time. Keep these security tips in mind, stay alert & #SafeWithSBI.#AmritMahotsav #CyberSafety #OnlineSafety pic.twitter.com/UnL3b5iJYU
— State Bank of India (@TheOfficialSBI) May 30, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.