sbi bank atm state bank atm state bank of india : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஏடிஎம்-லிருந்து ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க 24 மணி நேரமும் ஓடிபி எண் சரிபார்ப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஏடிஎம் அட்டைகளில் மோசடி செய்து பணம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நடைமுறை தற்போது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை நடைமுறையில் உள்ளது.
Advertisment
எஸ்பிஐ ஏடிஎம்கள் அனைத்திலும் இந்த நடைமுறை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது, தற்போது இரவில் மட்டும் இருந்த இந்த பாதுகாப்புவழிமுறை, வாடிக்கை யாளர்களின் நலன் கருதி, 24 மணி நேரமும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதனால் மோசடியாக ஏடிஎம்களில் பணம் எடுப்பது தவிர்க்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை ஏடிஎம்-மில் இருந்து எடுக்கும் போது, ஏடிஎம் அட்டையின் பின் எண்ணுடன், செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஓடிபி எண்ணையும் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்மில் பணம் எடுக்க வசதியாக, வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது சரியான செல்லிடப்பேசி எண்ணை வங்கியில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவல் பலருக்கும் தெரிவதில்லை. வாடிக்கையாளர்கள் பலரும் செல்போன் கொண்டு செல்லாமல் குழம்பி வருகின்றனர். அதனால் இந்த தகவல் மீண்டும் அவர்கள் பார்வைக்காக பகிரப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil