SBI Bank digital fraud alert Tamil News: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது 45 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடி நடைமுறைகளுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் வங்கி தொடங்குவதன் மூலம் வங்கி வசதிகள் கணிசமாக மேம்பட்டுள்ளன என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால் இது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சிரமங்களையும் உருவாக்கியுள்ளது. பல வங்கிகளும், இந்திய ரிசர்வ் வங்கியும் (ரிசர்வ் வங்கி) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது டிஜிட்டல் மோசடி தொடர்பாக எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கு இதுவே காரணம் ஆகும்.
மோசடி வழக்குகள் அதிகரிப்பதற்கு எதிராக எஸ்பிஐ எச்சரிக்கை
வேகமாக வளர்ந்து வரும் வங்கி மோசடி குறித்து எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் மக்கள் தங்கள் மொபைலில் இருந்து வெவ்வேறு பயன்பாடுகள் மூலம் வங்கி வசதிகளைப் பெறுகிறார்கள். ஆனால் உங்கள் வங்கி தொடர்பான தகவல்களை உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருப்பவர்களில் நீங்களும் இருந்தால், நீங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எஸ்பிஐ வங்கியின் மோசடி எச்சரிக்கை
வங்கி மோசடி வழக்குகள் வேகமாக வளர்ந்து வருவதற்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எஸ்பிஐ கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த ரகசிய தகவலையும் தங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருக்கக்கூடாது என்றும் அதன் எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது. உங்கள் வங்கி பின், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவல் மற்றும் அதன் கடவுச்சொல், சி.வி.வி போன்றவற்றை மொபைலில் சேமித்து வைத்திருந்தால், நீங்கள் டிஜிட்டல் மோசடிக்கு பலியாகும் அபாயம் அதிகம் என்று எஸ்பிஐ எச்சரித்துள்ளது. "உங்கள் மொபைலில் இருந்து வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனடியாக நீக்க வேண்டும்" என எஸ்பிஐ வாங்கி தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.