இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி வகிதத்தை தற்போது மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது, 2022 பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
தற்போதைய அறிவிப்பின்படி, பிக்சட் டெபாசிட் காலம் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சேமிப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும். ரூ.2 கோடி வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ புதிய பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்
2 முதல் 3 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் 5.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு, 5.10 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
மேலும், 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டேர்ம் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் 5.30 சதவீதத்திலிருந்து 5.45 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 5 முதல் 10 ஆண்டு வரம்பு கொண்ட டெபாசிட்களுக்கு 5.50% வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.
அதேசமயம், SBI குறுகிய கால நிலையான வைப்புகளுக்கான FD விகிதங்களை மாற்றவில்லை. உதாரணமாக, எஸ்பிஐ ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 5.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் அனைத்து நிலையான வைப்பு முதலீடுகளிலும் 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி விகிதங்களைப் பெறுவார்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, அண்மையில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை 4% மற்றும் 3.35% ஆக மாற்றியமைக்க முடிவு செய்ததை அடுத்து, எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் விகிதங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil