எஸ்பிஐ சர்வோத்தம் எஃப்.டி வட்டி விகிதம்: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்காக அம்ரித் கலாஷ் மற்றும் சர்வோத்தம் என்ற இரண்டு திட்டங்களை வழங்கிவருகிறது.
இரண்டுமே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஆகும். எஸ்.பி.ஐ வங்கி மூத்த குடிமக்களுக்காக சர்வோத்தம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் 7.90% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இருப்பினும், முதலீட்டாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பல விதிகள் உள்ளன. எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் நீங்கள் நேரத்திற்கு முன்பே பணத்தை எடுக்க முடியாது.
இதில் நீங்கள் நேரத்திற்கு முன்பே பணத்தை எடுக்க முடியாது. குறைந்தப்பட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
எஸ்.பி.ஐ சர்வோத்தம் எஃப்.டி திட்டம் வட்டி
எஸ்பிஐ சர்வோத்தம் திட்டம் பி.பி.எஃப், என்.எஸ்.சி மற்றும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. எஸ்பிஐயின் இந்த திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது ஒரு வருடம் மற்றும் இரண்டு ஆண்டுகள் காலம் மட்டுமே ஆகும்.
அதாவது, குறுகிய காலத்தில் பெரிய நிதியை உருவாக்கலாம். மேலும், எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2 வருட டெபாசிட்டுக்கு 7.4% வட்டி பெறுகிறார்கள. இந்த வட்டி விகிதம் பொது மக்களுக்கானது. மூத்த குடிமக்கள் 7.90 சதவீத வட்டி பெறுகிறார்கள். ஓராண்டு முதலீட்டில் பொது மக்களுக்கு 7.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
மேலும், மூத்தக் குடிமக்களுக்கு, 1 ஆண்டு சர்வோத்தம் டெபாசிட் ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் 7.82 சதவீதம் ஆகும்.
அதேசமயம், இரண்டு வருட டெபாசிட்டுக்கான வருவாய் 8.14 சதவீதம் ஆகும். மூத்த குடிமக்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த டெபாசிட்டுகளுக்கு 1 ஆண்டுக்கு 7.77 சதவீத வட்டியும், 2 ஆண்டுகளுக்கு 7.61 சதவீத வட்டியும் கிடைக்கும். இத்திட்டத்தில் கூட்டு வட்டி கிடைக்கும்.
இவ்வளவு பணத்தை முதலீடு செய்யலாம்
எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்களுக்கும், பிஎஃப் நிதிப் பணம் வைத்திருப்பவர்களுக்கும் இந்தத் திட்டம் சிறந்தது. எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தில் அவர்கள் முதலீடு செய்யலாம்.
இதில் ரூ.2 கோடிக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்பும் உள்ளது ஆனால் வட்டி 0.05 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“