SBI வட்டி குறைப்பு: ரூ.50 லட்சம் வீட்டுக் கடனுக்கு உங்க இ.எம்.ஐ எவ்வளவு தெரியுமா?

கடந்த 2 நிதி ஆண்டில் நீங்கள் செலுத்திய வருமான வரி ரிட்டர்ன்ஸ் ஆவணம் அல்லது ஃபார்ம் 16 ஆவணங்களின் நகல் போன்ற ஆவணங்களை நீங்கள் செலுத்த வேண்டும்

Home loan, house loan, EMI, business news, tamil news, Business news in Tamil

SBI bank loan EMI interest rates: இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கும் ஏற்ற வகையில் மிகவும் சிறப்பான வீட்டுக் கடன் வசதிகளை வழங்கி வருவதாக எஸ்.பி.ஐ. கூறுகிறது. 30 லட்சம் மக்கள் தங்களின் சொந்த வீட்டு கனவை அடைய எஸ்.பி.ஐ வங்கிக் கடன் கொடுத்துள்ளது. ரெகுலர் ஹோம் லோன்கள் துவங்கி, அரசு ஊழியர்களுக்கு எஸ்.பி.ஐ. ப்ரிவிலேஜ் ஹோம் லோன், ராணுவத்தில் இருக்கும் வீரர்களுக்கு சௌர்ய ஹோம் லோன், , SBI MaxGain Home Loan, SBI Smart Home, மற்றும் என்.ஆர்.ஐ. ஹோம் லோன்கள் என்று பல்வேறு விதமான ஹோம் லோன்களை வழங்கி வருகிறது அந்த வங்கி.

இதனால் அந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

குறைவான வட்டி, ஜீரோ ப்ரோசசிங் கட்டணம், எந்த விதமான மறைக்கப்பட்ட உள்கட்டணம் இல்லை, பெண் கடனாளிகளுக்கு குறைவான வட்டி, கிரெடிட் ஸ்கோருடன் இணைக்கப்பட்ட ஹோம் லோன் வழங்கும் வசதி, ப்ரீ பேமெண்ட் பெனலாட்டி இல்லை, குறைந்து வரும் கடன் தொகைக்கு ஏற்ற வகையில் வட்டி குறைப்பு போன்றவை இந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஆகும்.

எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்?

உங்களின் கடன் மதிப்பின் அளவிற்கு ஏற்ற வகையில் இல்லாமல் அனைத்து கடன்களுக்கும் 6.70% வட்டி விகிதம் தரப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. ஹோம் லோன் கால்குலேட்டர் : இது நீங்கள் வாங்கியுள்ள வங்கிக் கடனுக்கான வட்டி, மாதாந்திர தவணை தொகை, எவ்வளவு காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.

யோனோ எஸ்.பி.ஐ. செயலியை பயன்படுத்தி எவ்வாறு வீட்டுக் கடனை பெறுவது?

உங்களின் யோனோ செயலில் லாக் இன் செய்யுங்கள்

இடது பக்கம் இருக்கும் மெனுவை க்ளிக் செய்யவும்

அதில் லோன் என்ற பகுதியை தேர்வு செய்யவும்

ஹோம் லோன் செல்லவும்

உங்களின் பிறந்த தேதியை உள்ளீடாக செலுத்தி நீங்கள் கடன் வாங்க தகுதியானவரா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்

உங்களின் பணியை குறிப்பிடவும்

உங்களின் மாதாந்திர வருவாயை குறிப்பிடவும்

ஏற்கனவே ஏதேனும் கடன் வாங்கியிருந்தால் அதனை குறிப்பிடவும்

நீங்கள் எவ்வளவு கடன் வாங்க தகுதியானவர் என்பதை அது குறிப்பிடும்.

இதர தகவல்களை உள்ளீடாக செலுத்தி விண்ணப்பத்தை சமர்பிக்கவும்

உங்களுக்கு ஒரு ரெஃப்ரென்ஸ் எண் கிடைக்கும். எஸ்.பி.ஐ. வங்கியை சேர்ந்த அதிகாரி ஒருவர் உங்களுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுப்பார்

உங்கள் லோனை பெற தர வேண்டிய ஆவணங்கள் என்ன?

வேலை பார்க்கும் இடத்தின் அடையாள அட்டை

மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்

பான்/ஆதார்/பாஸ்போர்ட்/ வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் என ஏதேனும் ஒன்றை சமர்பிக்கவும்

உங்களின் வீடு தொடர்பான ஆவணங்கள்

வீடு கட்ட வழங்கப்பட்ட அனுமதி தொடர்பான நகல்

அக்யூபென்சி சான்றிதழ்

அனுமதிக்கப்பட்ட திட்டத்தின் நகல், பதிவு செய்யப்பட்ட பில்டரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் நகல்

நீங்கள் உங்களின் வீட்டை கட்டும் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கிய பணத்திற்கான வங்கி கணக்கு அறிக்கை

வங்கிக் கணக்கு அறிக்கை 6 மாதங்களுக்கானது.

இதற்கு முன்பு ஏதேனும் கடன் இருந்தால் தற்கான கடன் கணக்கு அறிக்கை ஒரு வருடத்திற்கானது

வருமான சான்றிதழ்

மூன்று மாதங்களுக்கான சேலரி ஸ்லிப்

கடந்த 2 நிதி ஆண்டில் நீங்கள் செலுத்திய வருமான வரி ரிட்டர்ன்ஸ் ஆவணம் அல்லது ஃபார்ம் 16 ஆவணங்களின் நகல்

சுயதொழில் முனைவோர் என்றால் அதற்கான வருமான சான்றிதழ்

தொழில் நடைபெறும் இடத்தின் முகவரி சான்று

மூன்று வருடங்களுக்கான ஐ.டி. ரிட்டர்ன்ஸ் சான்றிதழ்

மூன்று வருடங்களுக்கான லாப நட்ட கணக்கிற்கான பேலன்ஸ் ஷீட் சான்று

டி.டி.எஸ். சான்று

தகுதி சான்று (மருத்துவ அதிகாரிகளிடம் இருந்து பெற்றது)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi bank loan emi interest rates

Next Story
PF News: தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டிப் பணம்… உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com