இதற்கெல்லாம் நாங்கள் “போன்” செய்வதே இல்லை! வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ., ஆர்.பி.ஐ., அரசு அலுவலகங்கள், காவல்த்துறை, கே.ஒய்.சி அப்டேட்டிற்காக அழைக்கின்றோம் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
State Bank of India : கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் நாம் பெரும்பாலும் இப்போது இணைய வழி வங்கி சேவைகளை பெற்று வருகின்றோம். பணம் அனுப்புதல், பெறுதல் அனைத்தும் செயலிகள் அல்லது இணையப் பரிவர்த்தனைகள் மூலமே நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சில நொடிகளில் ஏமாற்றுக்காரர்களால் கொள்ளை அடிக்கப்படும் சம்பவங்களை குறைக்க பல நேரங்களில் வங்கிகள் எச்சரிக்கை செய்வது வழக்கம். தற்போது மீண்டும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அப்படி ஒரு எச்சரிக்கையை வழங்கியுள்ளது எஸ்.பி.ஐ.
Advertisment
எந்த ஒரு நம்பிக்கையற்ற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் இணைப்பை பயன்படுத்தி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்களில் எந்த ஒரு விபரங்களையும் வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
எஸ்.பி.ஐ., ஆர்.பி.ஐ., அரசு அலுவலகங்கள், காவல்த்துறை, கே.ஒய்.சி அப்டேட்டிற்காக அழைக்கின்றோம் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி.
பிறந்த தேதி, டெபிட் கார்ட் அட்டை, வங்கி சேவைகளுக்கான ஐ.டி. மற்றும் கடவுச்சொல், டெபிட் கார்ட் பின், ஓ.டி.பி உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிரக் கூடாது.
சமூக வலைதளங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்களில் வரும் அதிக பரீட்சயம் இல்லாத சலுகைகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil