sbi bank onlinebanking : முன்பெல்லாம் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் முதலில் வங்கிக்கு நேராக செல்ல வேண்டும். அங்கு சென்ற பின்பு முறையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். பின்பு வங்கியின் நிபந்தனை புத்தகத்தை தெளிவாக வாசிக்க வேண்டும்.
அதன் பின்பு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வங்கியில் சேமிப்பு கணக்கு அல்லது பிக்சட் டெபாசிட் கணக்கை தொடர வேண்டும்.சில வகையாக கணக்கு உடனே ஆக்டிவேட் ஆகிவிடும். சில சேமிப்பு கணக்கு 15 நாட்கள் கழித்து ஆக்டிவேட் ஆகும்.
sbi bank onlinebanking : அப்படி என்ன வசதி?
ஆனால் இனிமேல் அப்படி இல்லை. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரில் செல்லாமலே வீட்டில் இருந்தப்படியே உங்களுக்கு தேவையான சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எஸ்பிஐ தொடங்கியுள்ள இந்த திட்டம் இப்போது கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது தான் உண்மை.
பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை தெரிந்துக் கொள்வது அவசியம்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மினிஸ்டேட்மென்ட், செக் புக் ,பேலன்ஸ் போன்ற வசதிகளை வீட்டில் இருந்தப்படி மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பெறலாம்.அதே நேரம், பணம் டெபாசிட் செய்ய, பணம் எடுக்க, காசோலைகள் தொடர்பான சேவைகள், அரசாங்க பரிவர்த்தனைகள் செய்ய கட்டாயமாக வாடிக்கையாளர்கள் வேறு வழியில்லை வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும்.
கூடுதலாக யோனா ஆப் மூலம்பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளையும் செய்துகொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"