sbi bank onlinebanking : லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள எஸ்பிஐ வங்கியின் தொடர் அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது. ஆனால் எஸ்பிஐ வங்கி இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சேமிப்புக் கணக்குகளுக்கான டெபாசிட் வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு எஸ்பிஐயில் வட்டி விகிதம் 2.70 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது 2 ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதன் தாக்கமாக டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைத்து வருவதை கவனிக்க வேண்டும். ஸ்டேட் வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது மே 31 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது என வங்கி தரப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ பர்சனல் லோன்... நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்!
sbi bank onlinebanking : என்ன செய்வது?
முன்னதாக மே மாதத்தில் சில்லறைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஸ்டேட் வங்கி 40 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருந்தது. இந்த நேரத்தில் தான் முதியவர்கள் ஸ்டேட் வங்கியில் இருக்கும் மற்றொரு திட்டமான மூத்த குடி மக்களுக்காக ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். , எஸ்பிஐ வீ கேர் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடி மக்களுக்குக் கூடுதலாக 0.30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதிகபட்சம் 5.7 சதவீதம் வரையில் மட்டுமே லாபம் பெற முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil