sbi bank sbi sbi bank interest sbi account interest : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பி.ஓ. அதிகாரிகளுக்கு அடிப்படை ஊதியம் ரூ.27,000 ஆக உள்ளது. இதில் 3.3 சதவீத அகவிலைப்படி உயர்வு சேர்த்தால் மாதத்துக்கு 900 ரூபாய் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும். புரோமோசனுக்குப் பிறகு அதிகபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.42,000 ஆக உயரும். இவ்வாறாக, அனைத்து அரசு வங்கிகளிலும் ஊதிய உயர்வு இருக்கும்.
2020ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்தாலும் வங்கி ஊழியர்களுக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், வங்கி ஊழியர்களுக்கான சம்பளத்தை ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்த்த ஒப்புதல் தரப்பட்டது. இதற்காக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து வங்கிகளுக்கு ரூ.7,900 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில்தான் இந்த அகவிலைப்படி கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் முந்தைய மாதத்துக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு மதிப்பிடப்பட்டு அதற்கேற்ப அகவிலைப்படியும் கணக்கிடப்படுகிறது. முந்தைய மூன்று மாதங்களுக்கான சராசரியைப் பொறுத்து இது கணக்கிடப்படுகிறது. 2020 அக்டோபர் மாதத்தில் 7,855.76 ஆக இருந்த அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு நவம்பர் மாதத்தில் 7,882.06 ஆகவும், டிசம்பர் மாதத்தில் 7,809.74 ஆகவும் இருந்தது.