பாரத ஸ்டேட் வங்கி தனதுவாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அவசர கால கடன் (எமர்ஜென்சி லோன் ஸ்கீம்) என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்படும்.
எஸ்பிஐ.யின் “யோனோ’’ செயலி மூலம் இந்த கடனுக்குவாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டி 10.5 சதவீதமாகும். இதற்கான சுலப தவணை 6 மாதங்களுக்குப் பிறகு தொடங்கும்.இந்த கடன் வசதியைப் பெறும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு சுலபதவணை தொகையை செலுத்தலாம்.
இந்த கடன் வசதி தங்களுக்கு கிடைக்குமா அதற்குரிய தகுதிகளை அறிந்துகொள்ள குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி தெரிந்து கொள்ளலாம். PAPL (space)என டைப் செய்து தங்களது வங்கிக்கணக்கின் கடைசி 4 இலக்கை எண்ணையும் சேர்த்து 567676 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.
கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ செயலியானயோனோ (YONO) செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியாக அளிக்கப்படும். தேவைப்படும் கடன் தொகையை பூர்த்தி செய்து அனுப்பலாம். உடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத எண் (பாஸ்வேர்டு) அவர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வரும். அதை அனுப்பியவுடன் நீங்கள் கோரிய கடன் தொகை வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
பாரத ஸ்டேட் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டியை 15 புள்ளிகள் குறைத்துள்ளது. அத்துடன் மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான வட்டியை அதிகரித்துள்ளது. ‘எஸ்பிஐ வி கேர் டெபாசிட்’ என்ற பெயரிலான இந்த சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளின் ஏடிஎம் என்னும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் நடைபெறும் மோசடியைத் தடுப்பதற்குப் பாரத ஸ்டேட் வங்கி, ஓடிபி என்னும் ஒருமுறை பயன்படக்கூடிய இரகசிய குறியீட்டெண் வசதியைக் கைக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.சில ஆண்டுகளாக குளோனிங் மற்றும் ஸ்கிமிங் என்னும் மோசடி முறைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் அட்டைகளை போலியாகத் தயாரித்துச் செய்யப்படும் மோசடி அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்க வங்கிகள் பல பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil