sbi bank state bank state bank of india interest sbi bank
sbi bank state bank state bank of india interest sbi bank : வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் வரி சேமிப்புக்கான முதலீடுகள் என்று பார்க்கும் போது நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் தான் வரிசையில் முதலில் வந்து நிற்கும். வங்கி சார்ந்த முதலீட்டுத் தயாரிப்பு என்பதாலும் அதில் உள்ள குறைந்த ஆபத்து மற்றும் நிறைவான பாதுகாப்பான தன்மை ஆகியவற்றால், முதலீட்டாளர்கள் நிரந்தர வைப்புத் தொகையையே அதிகம் நம்புகின்றனர்.
Advertisment
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகள் வரி சேமிப்புக்கான வைப்புத் தொகை திட்டங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகள் வழங்கும் வைப்புத் தொகை திட்டங்களின் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படுகிறது
ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விரும்புவோருக்கு பங்குச் சந்தை போன்ற பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்ய விரும்புவோருக்கு சில முதலீட்டுக் கருவிகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது ஃபிக்ஸட் டெபாசிட்.
ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்வோருக்கு ஃபிக்ஸட் டெபாசிட் செல்லப்பிள்ளை போன்றது. ஆனால் அண்மைக்காலமாக ஃபிக்ஸட் டெபாசிட் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. காரணம், ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. இதன் விளைவாக வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டியை குறைத்து வருகின்றன.
Advertisment
Advertisements
இந்த வரிசையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை குறைத்துள்ளது. குறிப்பிட்ட சில மெச்சூரிட்டி காலங்களுக்கு மட்டுமே வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
7 முதல் 45 நாட்கள் - 2.9%
46 முதல் 179 நாட்கள் - 3.9%
180 முதல் 210 நாட்கள் - 4.4%
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் - 4.9%
2 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் - 5.1%
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil