SBI bank Tamil News: எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, நிலையான வைப்புத்தொகை கணக்கை (எஃப்.டி) ஆன்லைனில் துவங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) புதிய வழி முறைகளை கொண்டுள்ளது. இந்த ஆன்லைன் வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தும் முறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் ஆன்லைனில் எஃப்.டி.யைத் திறந்த பிறகு, ஆன்லைனில் உள்ள வைப்புத்தொகையை உடனடியாக புதுப்பித்து மூடலாம். மேலும், ஒரு கணக்கைத் திறப்பதற்கு முன், வாடிக்கையாளர் எஃப்.டி.யில் முதிர்வு மதிப்பு மற்றும் வட்டி வீதத்தைக் கணக்கிட ஆன்லைன் எஃப்.டி வட்டி கால்குலேட்டரின் உதவியைப் பெறலாம். மற்றும் அசல் தொகை, கால வரையறை, வட்டி விகிதம் மற்றும் வட்டி செலுத்தும் விருப்பத்தை ஆன்லைனில் உள்ளிட்டு பயன்படுத்தலாம்
ஆன்லைனில் எஃப்.டி கணக்கை எவ்வாறு துவங்குவது?
முதலில் எஸ்பிஐ வங்கியின் வலைத்தள பக்கத்திற்கு செல்லவும். பின்னர் அதில் உங்கள் தனிப்பட்ட சான்றுகளை வழங்கி உள்ளே நுழையவும்.
இப்போது முகப்புப்பக்கத்தைப் பார்வையிட்டு, (Deposit Schemes) ‘வைப்புத் திட்டங்கள்’ என்பதில் ‘Term Deposits’ ‘கால வைப்புத்தொகை’ என்பதை கிளிக் செய்யவும். அடுத்து மேல் மெனுவில் உள்ள ‘மின்-நிலையான வைப்பு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் திறக்க விரும்பும் எஃப்.டி வகையைத் தேர்வுசெய்து, ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
எந்த வங்கி கணக்கில் பணத்தை டெபிட் செய்ய உள்ளீர்கள் என்பதையும் தேர்வுசெய்ய வேண்டும்.
பின்னர் எஃப்.டி முதன்மை மதிப்பைத் தேர்ந்தெடுத்து, அதை ‘தொகை’ என்பதின் நெடுவரிசையில் நிரப்பவும். உங்கள் வயது 60 க்கு மேல் இருந்தால் ‘மூத்த குடிமக்கள்’ தாவலைத் தேர்வு செய்து கொள்ளவும்.
ஒரு ஒட்டுமொத்த அல்லது எஸ்.டி.டி.ஆர் (STDR) வைப்புத்தொகை, அல்லது ஒட்டுமொத்த அல்லாத அல்லது டி.டி.ஆர் (TDR) வைப்புத்தொகையைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப முதிர்வு தேதி அல்லது இணைய செலுத்தும் அதிர்வெண்ணைத் தேர்வு செய்து கொள்ளவும்.
இப்போது முதிர்வு வழிமுறைகளைத் தேர்வுசெய்து, விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்த பிறகு, அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். ‘சமர்ப்பி’ என்ற பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.