SBI bank Tamil News: இந்தியாவின் மிகப்பெரிய பொத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், புதிய நிலையான வைப்புத்தொகைகளுக்கான (எஃப்டி – ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி விகித்தை அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நேற்று புதன்கிழமை ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக அறிவித்ததை அடுத்து இந்த புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இது குறித்து எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா கூறுகையில், “புதிய நிலையான வைப்புகளைப் பொறுத்த வரையில், அவை புதிய வட்டி விகிதங்களின்படி இருக்கும். சில முதிர்வுகளுக்கு நாங்கள் ஏற்கனவே எங்கள் வைப்பு விகிதங்களை அதிகரித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
எஸ்பிஐ எஃப்டி (ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி விகிதங்கள் 2022
தற்போது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை திறந்திருக்கும் எஃப்டிகளுக்கு 5.10 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்கு நீங்கள் புதிய எஃப்டிகளைத் திறந்தால், எஃப்டி மீதான வட்டி விகிதம் 5.45 சதவீதமாக இருக்கும்.
அதிக இஎம்ஐகள்
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வுக்குப் பிறகு, கடன் வாங்குபவர்கள் கடனுக்கான அதிக வட்டி விகிதங்கள் மற்றும் சமமான மாதாந்திர தவணைகள் (இஎம்ஐக்கள்) செலுத்த வேண்டும்.

“மாறும் வட்டி விகித அளவுகோல்களுடன் இணைக்கப்பட்ட கடன் தொடர்புகள் உள்ளன. அத்தகைய கடன் தொடர்புகளுக்கு இது வட்டி விகிதங்களை அதிகரிக்க வழிவகுக்கும்,” என்று எஸ்பிஐ தலைவர் காரா குறிப்பிட்டுள்ளார்.
ரூபே கிரெடிட் கார்டுகளில் தொடங்கி, கிரெடிட் கார்டுகளை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸுடன் (யுபிஐ) இணைக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. விசா மற்றும் மாஸ்டர்கார்டு போன்ற பிற கார்டுகளிலும் இதே செயல்முறை நடைபெற வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ எஸ்பிஐ தலைவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil