SBI bank tamil news: எஸ்பிஐ வங்கியின் மல்டி ஆப்ஷன் டெபாசிட் ஸ்கீம் (எம்ஓடிஎஸ்) என்பது சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு (தனிநபர்) உடன் இணைக்கப்பட்ட கால வைப்பு நிதி கணக்கு ஆகும். இதுவும் ஒரு வகையான ஃபிக்ஸட் டெபாசிட் போல் தான். ஆனால் இந்த எம்ஓடிஎஸ் கணக்குகளிருந்து உங்களுக்கு நிதி தேவைப்படும் போது ரூ.1000 முதல் எடுத்துக்கொள்ளலாம். அதே போன்று இந்த எம்ஓடிஎஸ் கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்த நிதிக்கான வட்டியும் கிடைக்கும்.
எஸ்பிஐ வங்கியின் மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டத்தைப் பற்றி (எம்ஓடிஎஸ்) நீங்கள் அறிய வேண்டிவை
1) எஸ்பிஐ வங்கியில் ஒரு எம்ஓடிஎஸ் கணக்கை உருவாக்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.10,000 ஆகும். அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 என்ற முறையில் செலுத்தலாம்.
2) நீங்கள் துவங்கும் எம்ஓடிஎஸ் கணக்கிற்கான அதிகபட்ச கால வைப்புத் தொகைக்கான வரம்பு இல்லை.
3) மற்ற வைப்புத்தொகை கணக்குகளுக்கு வழங்கப்படும் அதே வட்டி விகிதம் தான் எம்ஓடிஎஸ் கணக்கிற்கும் வழங்கப்படும். மற்றும் எஸ்பிஐயின் எஃப்.டி வட்டி விகிதங்கள், பொது வாடிக்கையாளர்களுக்கு 2.9% முதல் 5.4% வரை வேறுபடுகின்றன. இந்த விகிதங்கள் ஜனவரி 20 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
4) இந்த கணக்கிற்கான குறைந்தபட்ச கால வரையறை 1 வருடம் மற்றும் அதிகபட்சம் 5 ஆண்டுகள்.
5) இந்த எம்ஓடிஎஸ் கணக்கில் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. 5 லட்சம் வரையிலான எஃப்.டி.க்களுக்கு, முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம் 0.50 சதவீதம் ஆகும். அதே போன்று 5 லட்சத்துக்கு மேல் மற்றும் ₹ 1 கோடிக்குக் குறைவான எஃப்.டி.க்களுக்கு, பொருந்தக்கூடிய அபராதம் 1 சதவீதம் ஆகும்
எம்ஓடி கணக்கில் உள்ள நிதியை திரும்ப பெற நினைக்கும் போது, திரும்ப பெற நினைத்த தொகையுடன் இயங்கிய காலத்திற்கு பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி அபராதத்துடன் செலுத்தப்படுகிறது. மீதமுள்ள தொகை அசல் வட்டி விகிதத்தை தொடர்ந்து பெறுகிறது. மற்றிம் இதில் 7 நாட்களுக்கு குறைவான காலத்தில் வைக்கப்பட்ட வைப்புத்தொகைக்கு வட்டி செலுத்தப்படுவதில்லை.
6) இந்தக் கணக்கை தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறந்து கொள்ளலாம். அதோடு பெருநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் எந்தவொரு அரசாங்கத் துறையும் இந்த கணக்கைத் திறக்கலாம்.
7) எம்ஓடிஎஸ் கணக்கில் உள்ள உங்கள் வைப்பு நிதியில் (டி.டி.எஸ்) வரி கழிக்கப்படும்.
8) இந்த கணக்கில் உங்களுக்கான கடன் வசதி உள்ளது.
9) எஸ்பிஐயின் இந்த எம்ஓடிஎஸ் கணக்கிற்கு நியமனம் வசதி உள்ளது. எனவே உங்களுக்கு விருப்பமானவர்களை நியமித்து கொள்ளலாம்.
10) ஆன்லைன் எஸ்பிஐ மூலமாகவோ அல்லது உங்கள் அருகிலுள்ள எஸ்பிஐயின் கிளையிலோ இந்த எம்ஓடிஎஸ் கணக்கை துவங்கலாம்.
எஸ்பிஐ வங்கியின் எம்ஓடிஎஸ் கணக்கை ஆன்லைன் மூலம் துவங்குவதற்கான படிகள்
1) முதலில் SBI online என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.
2) ஃபிக்ஸட் டெபாசிட் என்ற விருப்பதை தெரிவு செய்யவும்.
3) இங்கே நீங்கள் e-TDR / e-STDR (FD) என்ற விருப்பதை காணலாம். இப்போது அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4) இப்போது, e-TDR / e-STDR (MOD) மல்டி ஆப்ஷன் டெபாசிட்டைத் தேர்ந்தெடுத்து தொடரவும்.
5) பின்னர் உங்கள் டெபிட் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் MOD தொகையை உள்ளிட்டு, TDR அல்லது STDR போன்ற வைப்பு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு உங்கள் MOD க்கான கால வரையறையை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
6) இப்போது உங்கள் MOD கணக்கை தொடங்கு வதற்கான கோரிக்கையை உறுதிப்படுத்தவும்.