SBI bank Tamil News: இந்தியாவின் மிகப்பெரிய பொத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), கடந்த ஆண்டு மே மாதத்தில் மூத்த குடிமக்களுக்காக எஸ்பிஐ 'WECARE' எனும் சிறப்பு கால வைப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் செப்டம்பர் மாதத்தோடு முடிவடையும் என தெரிவித்திருந்த நிலையில், அதை மீண்டும் டிசம்பர் இறுதி வரை நீட்டிக்க உள்ளதாக கூறியது. பின்னர் தொடர்ந்து இந்தாண்டு மார்ச் 31 வரை நீட்டித்திருந்தது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கும், சிறப்பு எஃப்.டி திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) உள்ளதாக தெரிவித்துள்ளது.
"சில்லறை டிடி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஒரு சிறப்பு திட்டமே இந்த எஸ்பிஐ 'விகேர்' (WECARE) டெபாசிட். இதில் 30 பிபிஎஸ் (தற்போதுள்ள 50 பிபிஎஸ்-க்கு மேல் மற்றும் அதற்கு மேல்) கூடுதல் பிரீமியமாக, மூத்த குடிமக்களுக்கு அவர்களின் சில்லறை டி.டி.யில் '5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு வைப்புதொகை வைப்பவர்களுக்கு மட்டுமே இது செலுத்தப்படும். 'எஸ்பிஐ விகேர்' வைப்புத் திட்டம் இந்தாண்டு ஜூன் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது "என்று எஸ்பிஐ வங்கி தனது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ சிறப்பு எஃப்.டி திட்டம்: சமீபத்திய வட்டி விகிதங்கள்
மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ சிறப்பு எஃப்.டி திட்டம் பொது மக்களுக்கு பொருந்தும் விகிதத்திற்கு மேல் 80 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வட்டி விகிதத்தைப் பெறும். தற்போது, எஸ்பிஐ வங்கி பொது மக்களுக்கு ஐந்து வருட எஃப்.டி.யில் 5.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு மூத்த குடிமகன் சிறப்பு எஃப்.டி திட்டத்தின் கீழ் ஒரு நிலையான வைப்புத்தொகையை வைத்தால், எஃப்.டி.க்கு பொருந்தும் வட்டி விகிதம் 6.20% ஆக இருக்கும்.
பொது மக்களுக்கான எஸ்பிஐ வங்கியின் சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள் (2 கோடிக்குக் கீழ்)
பொது வாடிக்கையாளர்களுக்கான எஃப்.டி வட்டி விகிதம் என்பது, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஸ்பிஐயின் எஃப்.டிகளுக்கு, 2.9% முதல் 5.4% வரை வட்டி விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு இந்த வைப்புகளில் 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) கூடுதலாக கிடைக்கும். இதை எஸ்பிஐ வங்கி கடைசியாக இந்தாண்டு ஜனவரி 8ல் எஃப்.டி விகிதங்களை திருத்தியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil