SBI News: வாட்ஸ் அப்பில் வங்கி சேவை வந்தாச்சு… உங்க பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது எப்படி?

வாட்ஸ்அப் சேவையை பெற வாடிக்கையாளர்கள் WAREG என டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு 7208933148 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

SBI Whatsapp Banking
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவை

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்.பி.ஐ.,யின் வங்கி சேவைகள் எளிமையான முறையில் வாட்ஸ்அப்பில் கிடைக்கின்றன.
இதன்மூலம் கணக்கின் இருப்பு நிலை மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் அறிக்கை உள்ளிட்டவற்றை தெரிந்துக்கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் சேவையை பெற வாடிக்கையாளர்கள் WAREG என டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு 7208933148 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங்கில் பதிவு செய்துவிட்டபின்பு, எஸ்பிஐயின் 90226 90226 என்ற எண்ணிலிருந்து கம்ஃபார்ம் செய்தி உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்படும்.
தொடர்ந்து +919022690226 என்ற எண்ணுக்கு ஹாய் எஸ்பிஐ (Hi SBI) என டைப் செய்தாலும், “அன்புள்ள வாடிக்கையாளர்களே, உங்களது எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் பதிவு வெற்றிகரமாக உள்ளது” என்ற குறுஞ்செய்தி வரும்.

இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் வாடிக்கையாளர்கள்

  1. கணக்கு இருப்புத் தொகை
  2. மினி ஸ்டேட்மெண்ட் என்னும் நிதிநிலை அறிக்கை விவரங்கள்
    ஆகியவை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது வாட்ஸ்அப் சேவையை துண்டிக்க விரும்பினால் எண் 3ஐ கிளிக் செய்ய வேண்டும்.

இது தவிர எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட விஷயங்களும் இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஏதேனும் புகார்கள் இருப்பினும் தெரிவிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi begins whatsapp banking service how to check account balance and mini statement

Exit mobile version