வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 2023ல் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளன. அந்த வகையில் தற்போது பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி), ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் வட்டி விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொருந்துகின்றன.
எஸ்பிஐ (SBI) 5 வருட நிலையான வைப்பு வட்டி விகிதம்
எஸ்.பி.ஐ பொது மக்களுக்கு 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி விகிதத்தை 5 வருட டெபாசிட்களுக்கு வழங்குகிறது.
கனரா வங்கி (Canara Bank)
ஆகஸ்ட் 8, 2023 முதல் கனரா வங்கி பொது மக்களுக்கு 6.7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.2% வட்டி விகிதத்தை 5 வருட கால வைப்புகளுக்கு வழங்குகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank)
ஐசிஐசிஐ வங்கி பொது மக்களுக்கு 5 ஆண்டு கால வைப்புகளுக்கு 7% வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
பேங்க் ஆஃப் பரோடா, 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 6.5% வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டியையும் மே 12, 2023 முதல் வழங்குகிறது.
ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
ஆக்சிஸ் வங்கி பொது மக்களுக்கு 5 ஆண்டு கால வைப்புகளுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஹைச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank)
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி பொது மக்களுக்கு 5 ஆண்டு கால வைப்புகளுக்கு 7% வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டியையும் வழங்குகிறது.
போஸ்ட் ஆபிஸ் எஃப்.டி
ஜூலை 1, 2023 முதல் செப்டம்பர் 9, 2023 வரை அமலுக்கு வரும் வகையில் பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு கால வைப்புத் தொகைக்கு 7.5% வட்டி விகிதத்தை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“