SBI Car Loan Interest Rate 2019: ஸ்டேட் வங்கியில் கார் லோன் பெறுகிறவர்களுக்கு புதுச் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாகன விற்பனை சரிந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் கார்களை பெறும் விதமாக இந்தப் புதிய சலுகையை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisment
தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என பண்டிகை சீஸன் நெருங்குகிறது. பலரும் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு கார் பரிசளிக்க விரும்புகிற தருணம் இது. அல்லது, தங்கள் நெடுநாள் கனவாக புது கார் வாங்க விரும்புகிற தருணமாக இது இருக்கலாம். ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு கார் வாங்க வழங்கும் கடனில் புதுச் சலுகை செய்கிறது ஸ்டேட் வங்கி.
sbi car loan scheme: ஸ்டேட் வங்கியில் கார் லோன்
அதாவது, கார் லோன்களுக்கு புராசஸிங் கட்டணத்தை ரத்து செய்து அறிவித்திருக்கிறது ஸ்டேட் வங்கி. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘கார் லோன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு 8.70 சதவிகிதம் என்கிற குறைந்த வட்டி விகிதத்தை ஸ்டேட் வங்கி நிர்ணயம் செய்திருக்கிறது’ என்றும் கூறப்பட்டிருக்கிறது. கார் விற்பனை சரிந்து வரும் நிலையில், தங்கள் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தச் சலுகையை ஸ்டேட் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர யோனா அல்லது ஸ்டேட் வங்கி வெப்சைட் மூலமாக ஆன்லைனில் கார் லோன்களுக்கு விண்ணப்பம் செய்கிறவர்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு விண்ணப்பம் செய்கிறவர்களுக்கு வட்டி விகிதத்தில் 25 பேசிக் பாயிண்ட் தள்ளுபடி செய்யப்படும். ஒரு பேசிக் பாயிண்ட் என்பது, ஒரு சதவிகிதத்தில் நூற்றில் ஒரு பங்கு ஆகும்.
டெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க...
ஸ்டேட் வங்கியில் சம்பளதாரர் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், காருக்கான விலையில் 90 சதவிகிதம் வரை லோன் பெற முடியும். இது தவிர, தனது வாடிக்கையாளர்களுக்கு 10.75 சதவிகித வட்டியில் ரூ20 லட்சம் வரை பெர்சனல் லோன் வழங்குவதாகவும் ஸ்டேட் வங்கி குறிப்பிட்டிருக்கிறது.