SBI Car Loan Tamil News: இன்றைய உலகில் ஒரு காரை சொந்தமாக வைத்திருப்பது ஆடம்பரமல்ல, அது தேவையாகும். இந்திய சந்தைகள் புதிய கார் மாடல்களை தவறாமல் தொடர்ந்து அறிமுகப்படுத்துகின்றன. அது ஒரு மேம்படுத்தலாக இருக்கட்டும், முதல் காராக இருக்கட்டும் அல்லது குடும்பத்துக்கான அடுத்த காராக இருக்கட்டும். எந்த காராக இருந்தாலும் கார் கடன், கார் வாங்குவதை எளிதாக்குகிறது.
இருப்பினும் நீங்கள் கார் கடனை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பல்வேறு வங்கிகளில் செயல்முறை கட்டணம் மற்றும் வட்டி எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
SBI Car Loan News: எஸ்பிஐ கார் கடன்
பொதுவாக கார் கடன்கள் 5 ஆண்டுகள் வரை வழங்கப்படுகின்றன. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை 7 வருடங்கள் வரை கார் கடனை வழங்குகின்றன. ஒரு நீண்ட கால கார் கடன் உங்கள் மாத தவணையை குறைத்தாலும், அதிக வட்டி காரணமாக உங்கள் கடனின் ஒட்டுமொத்த செலவு அதிகரிக்கும்
கார் கடனை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் குறுகிய காலத்துக்கு ஒரு கார் கடனை தேர்ந்தெடுத்தால் மாத தவணை அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் பணம் செலுத்தாதது உங்கள் கடன் அறிக்கையில் ஒரு குறைபாட்டைக் குறிக்கும்.
நீங்கள் எவ்வளவு கார் கடன் பெற முடியும்
அதிகப்பட்ச கடன் தொகை காரின் ex-showroom விலை அல்லது சாலை விலையை (on-road price) பொறுத்து இருக்கும். மீதம் உள்ள தொகையை down-payment ஆக செலுத்த வேண்டும். முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்தும் வரை உங்கள் கார் கடனளிப்பவரிடம் அடமானமாக வைக்கப்பட்டிருக்கும்.
சில கடன் வழங்குநர்கள் காரின் முழு ex-showroom விலைக்கு கடன் வழங்குவார்கள், மற்ற சிலர் 80 சதவிகிதம் வரை கடன் வழங்கலாம். மேலும் நீங்கள் கடன் வழங்குநர்களிடன் செயல்முறை கட்டணம் (processing fee) குறித்தும் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கடன் வழங்குநர்களிடம் கடன் குறித்தான தகவல்களை பெற்று அதை ஒப்பிட்டு பார்த்து எது உங்களுக்கு பொருத்தமானதோ அதை தேர்ந்தெடுக்கலாம். சமூக விலகல் அவசியமாகிவிட்ட சூழலில் கார் தேவையும் அதிகரிப்பதாகப் படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.