/tamil-ie/media/media_files/uploads/2019/03/Rubique-Carloan-3-653x435.jpg)
ஐசிஐசிஐ
SBI car loan ZERO processing fee : எந்த வங்கியானாலும், அங்கு கடன்கள் வாங்குவதற்கு ப்ரோசசிங் ஃபீஸ் வாங்குவது வழக்கம். தங்க நகைக் கடன், பெர்சனல் லோன், ஆட்டோ மற்றும் வாகன கடன் மற்றும் இதர கடன்களுக்கும் இந்த ப்ரோசசிங் ஃபீஸ் வாங்குவது வழக்கத்தில் உள்ள ஒன்று. ஆனால் தற்போது எஸ்.பி.ஐ நிறுவனம், கார் லோன் வாங்குபவர்களுக்கான ப்ரோசசிங் ஃபீஸை முற்றிலுமாக ஜீரோவாக மாற்றியுள்ளது.
SBI car loan ZERO processing fee
எஸ்.பி.ஐ. கார் லோன் திட்டம், என்.ஆர்.ஐ கார் லோன் திட்டம், கார் லோன் லைட், எஸ்.பி.ஐ அஸ்ஸூர்ட் கார் லோன், லோயல்ட்டி கார் லோன் ஸ்கீம் ஆகிய திட்டங்களுக்கும் இந்த விதி முறை பொருந்தும்.
இருசக்கர வாகனங்கள், சூப்பர் பைக்குகள் மற்றும் ப்ரீ ஓண்ட் லோன் திட்டங்கள் மூலமாக 6 லட்சத்திற்கும் குறைவாக கடன்கள் வாங்குபவர்களுக்கு ப்ராசசிங் கட்டணமாக ரூபாய் 1000 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.
அதே போல் 6 லட்சத்திற்கு அதிகமாக கடன் வாங்குபவர்களுக்கு ப்ராசசிங் கட்டணமாக ரூபாய் 1500 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கார் லோன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் இதர மாற்றங்களை டிசம்பர் 10, 2018 அன்று எஸ்.பி.ஐ உருவாக்கியது. அனைத்துவிதமான கார் லோன்களுக்குமான வட்டி விகிதம் 9.3 சதவிகிதத்தில் இருந்து 9.8 சதவிகிதம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : குழந்தைகளின் எதிர்காலத்திற்கான இரண்டு வங்கிக் கணக்குத் திட்டங்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.