இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, ஃபிட்னஸ் மற்றும் ஹெல்த் ஆர்வலர்களுக்காக பிரத்யேக கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
விசா சிக்னேச்சர் பிளாட்ஃபார்மில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த புதிய கிரெடிட் கார்டு "பல்ஸ்" (PULSE) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கார்டுக்கான ஆண்டு உறுப்பினர் கட்டணம் (annual membership charge) ரூ.1,499 ஆகும்.
இது தொடர்பாக எஸ்பிஐ கார்டு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " வாடிக்காளர்கள் 1499 ரூபாய் ஆண்டு கட்டணம் செலுத்தி எஸ்பிஐ கார்டு பல்ஸ் வாங்கினால், அவர்களுக்கு ரூ.4,999 மதிப்புள்ள நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் (Noise Colorfit Pulse) ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும். அதே போல், இந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தி ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு கிரெடிட் கார்டுக்கான ஆண்டு சந்தாவில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பல்வேறு மருத்துவப் பலன்களையும், விடுமுறை மற்றும் உடல்நலக் கவரேஜ் பலன்களையும், எரிபொருள் செலவு விலக்கையும் பெறலாம்.
கூடுதலாக, நீங்கள் மருந்தகங்கள், திரைப்படங்கள் அல்லது வெளியே சாப்பிடும்போது கார்டை பயன்படுத்தினால் 5x போனஸ் புள்ளிகளைப் பெறுவீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ கார்டு மூலம் இஎம்ஐ-இல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, பிராசஸிங் கட்டணமாக ரூபாய்.99 செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, SBI வங்கி 19 விழுக்காடு கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சுமார் 12.76 மில்லியன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
Fitpass Pro-வின் ஓராண்டு ஃப்ரீ மெம்பர்ஷிப்-வுடன் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் 4,000 ஜிம்கள் மற்றும் ஃபிட்னஸ் ஸ்டுடியோக்களின் நெட்வொர்க் அணுகலை பெறமுடியும்.இதுமட்டுமின்றி, யோகா, நடனம் மற்றும் கார்டியோ போன்ற மெய்நிகர் உடற்பயிற்சி திட்டங்களுக்கு வரம்பற்ற அணுகலையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil