Advertisment

ATMகளில் இந்த முறையிலும் பணம் எடுக்கலாம் - SBI, ICICI வங்கிகள் புதுமை

SBI cardless cash withdrawal facility,ICICI Bank : ATMல் ஏடிஎம் கார்டு இல்லாமல், பணம் எடுக்கும் முறையினை SBI வங்கி குறிப்பிட்ட சில ஏடிஎம்களில் அமல்படுத்தியிருந்த நிலையில், ICICI வங்கி, தனது எல்லா ஏடிஎம்மிலும் இந்த சேவையை அமல்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI,SBI cardless cash withdrawal facility,ICICI Bank,ICICI Bank cardless cash withdrawal facility,Cardless cash withdrawal through SBI ATM,Cardless cash withdrawal through ICICI Bank

SBI,SBI cardless cash withdrawal facility,ICICI Bank,ICICI Bank cardless cash withdrawal facility,Cardless cash withdrawal through SBI ATM,Cardless cash withdrawal through ICICI Bank

ATMகளில் ஏடிஎம் கார்டு இல்லாமல், பணம் எடுக்கும் முறையினை SBI வங்கி குறிப்பிட்ட சில ஏடிஎம்களில் அமல்படுத்தியிருந்த நிலையில், ICICI வங்கி, தனது எல்லா ஏடிஎம்மிலும் இந்த சேவையை அமல்படுத்தியுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமான Cardless transaction முறையை ஊக்குவிக்கும் பொருட்டு, பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதுமையை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), cardless transaction முறையை அமல்படுத்தும் பொருட்டு Yono appன் உதவியுடன் தங்களுடைய வங்கியின் சில குறிப்பிட்ட ஏடிஎம்களில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையினை அமல்படுத்தியிருந்தது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், இந்த முறையின் மூலம், ஒருநாளைக்கு குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை பணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

SBI ATMகளில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெற வழிமுறை

SBI வங்கி வாடிக்கையாளர்கள், Yono appன் உதவியுடன் இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெற வேண்டும்.

லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பெற்ற பின்னர், அதில் லாகின் பண்ண வேண்டும்.

இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெற 6 இலக்க MPIN நம்பரை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எல்லா பணபரிவர்த்தனைகளுக்கும் இது முக்கியம் என்பதால், நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Yono app லாகின் செய்த பிறகு அதில் Yono cash பகுதிக்கு செல்லவும்.

Cardless transaction வசதி உள்ள ஏடிஎம்களுக்கு செல்லவும்.

ஏடிஎம்மில் தேவைப்படும் பணத்தின் மதிப்பை பதிவிடவும்.

வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு Yono cash transaction எண் வரும்.

இந்த எண், 4 மணிநேரமே செல்லுபடியாகும்.

ஏடிஎம்மில், Card-Less Transaction பிரிவை தேர்ந்தெடுத்து, கேட்கும் விபரங்களை பதிவு செய்தால், பணம் பெற்றுக்கொள்ளலாம்.

ICICI ATMகளில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெற வழிமுறை

Cardless transaction முறையை ஊக்குவிக்கும் பொருட்டு, ICICI வங்கி தனது எல்லா ஏடிஎம்களிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பெறும் வழிமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்த சேவைக்காக, ICICI வங்கி, பிரத்யேகமாக 'iMobile' app உருவாக்கியுள்ளது.

'iMobile' appல் லாகின் செய்து அதில் உள்ள சர்வீசஸ் பிரிவில், 'Cash Withdrawal at ICICI Bank ATM' என்பதை தெரிவு செய்யவும்.

பணத்தின் மதிப்பு, அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்டவைகளை தேர்வு செய்தபின்பு, நான்கு இலக்க தற்காலிக பின் நம்பரை உருவாக்கி, பதிவிட்டு சப்மிட் பட்டனை அளிக்கவும்.

வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிக்கு ஒன்டைம் பாஸ்வேர்டு ( OTP) வரும்.

ICICI ATMக்கு சென்று, Cardless Cash Withdrawal தெரிவு செய்யவும். அதில் மொபைல் எண், குறிப்பிட்ட ஓடிபி எண் பதிவு செய்த பிறகு, தற்காலிக 4 இலக்க பின் நம்பரையும் பதிவிட்டு, பின் amount for withdrawal தெரிவு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

ICICI ATMல் cardless transaction மூலமாக, நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Sbi Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment