ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம், பணத்தை திரும்பப் பெறுதல், காசோலை புத்தக கட்டணம் ஆகியவற்றில் திருத்தம் செய்துள்ளது.
ஜூலை 1, 2021 முதல் எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வரும். புதிய கட்டணங்கள் ஏடிஎம் திரும்பப் பெறுதல், காசோலை புத்தகம், பரிமாற்றம் மற்றும் பிற நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். KYC ஆவணங்கள் மூலம் எந்தவொரு நபரும் எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கைத் தொடங்க முடியும். எஸ்பிஐ BSBD கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. இந்த கணக்கு வைத்திருப்போருக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் வழங்கப்படுகிறது.
எஸ்பிஐ கிளைகள், எடிஎம்களில் பணம் எடுத்தல்
BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி கிளை மற்றும் ஏடிஎம்கள் மூலம் 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுக்கலாம். அதன்பிறகு சேவை கட்டணம் செலுத்த வேண்டும். ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.15 +GST கட்டணமாக வசூலிக்கப்படும்.இது எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் பணம் எடுப்பர்வகளுக்கும் பொருந்தும்.
செக்புக் கட்டணங்கள்
எஸ்.பி.ஐ தனது BSBD வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிதியாண்டில் 10 செக் லீப்களை இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு, 10 லீப் செக் புக்கிற்கு ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். 25 லீப் செக் புக்கிற்கு ரூ .75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அவசரமாக செக்புக் தேவைப்படும் பட்சத்தில் 10 அல்லது அதன் ஒரு பகுதிக்கு ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மூத்த குடிமக்கள் காசோலை புத்தகத்தில் புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் BSBD கணக்கு வைத்திருப்பவர்களால் நிதி அல்லாத பரிவர்த்தனை மேற்கொண்டால் எந்த கட்டணமும் இருக்காது.
இந்த மாத தொடக்கத்தில், எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 6.70% ஆக குறைத்தது. எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.70% வட்டியும், ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.95% வட்டியும் வசூலிக்கப்படுகிறது. ரூ.75 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு 7.05% வட்டி வசூலிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"