sbi charges for closure bank account : இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேமிப்பு கணக்கை மூடினால் கட்டணம் வசூலிக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து வாடிக்கையாளர்கள் தப்பிக்க இதுதான் சிறந்த வழி.
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பெரும்பாலான மக்கள் அக்கவுண்ட் க்ளோஸ் செய்வதை விரும்புவதில்லை. ஆனால் க்டந்த எஸ்பிஐ மினிமல் பேலன்ஸ் இல்லாத அக்கவுண்டில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மிகப் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு அளித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி கணக்கை மூட முடிவு செய்தனர்.
ஆனால் அதில் இருந்த பெரிய சிக்கல் என்னவென்றால் அக்கவுண்டை முழுமையாக மூடிட நீங்கள் வங்கி நிர்வாகத்திற்கு கட்டணம் கட்ட வேண்டும் என்பது தான்.எஸ்பிஐ வங்கியில் இருக்கும் சேமிப்பு கணக்குகளை மூட வேண்டும் என்றால் கணக்கு திறக்கப்பட்ட 14 நாட்கள் தவிர அனைத்து நிலைகளிலும் 500 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது. 500 ரூபாய் கட்டணம் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்து குறிப்பிடத்தக்கது.
மைனர் பிள்ளைகளுக்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் தொடங்க வேண்டுமா? இருக்கவே இருக்கு எஸ்பிஐ!
இனி குறைந்தபட்ச இருப்பு அளவின் மூலம் அவதிப்படும் மக்கள் எவ்விதமான தயக்கமுமின்றி எஸ்பிஐ வங்கி கணக்கை மூடிக்கொள்ளலாம். எப்படி தெரியுமா?சேமிப்பு கணக்கு திறக்கப்பட்ட 14நாட்கள் முதல் 1 வருடம் காலம் ஆன கணக்குகளை மூடினால் மட்டுமே 500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. பிற எந்த காரணத்திற்காகவும் கணக்கை மூடினால் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.