இதைச் செய்யாவிட்டால் உங்க பேங்க் அக்கவுண்ட் செயல்பாடு பாதிக்கும்: எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை
குறிப்பிட்ட வங்கி சேவைகளை பெற பான் கார்டினை பயன்படுத்த முடியாத நிலை வாடிக்கையாளார்களுக்கு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இதனை தெரிவித்துள்ளது அந்த வங்கி.
SBI customer alert : எஸ்.பி.ஐ வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் உங்களின் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
Advertisment
ஆதார அடையாள அட்டையுடன் பான் கார்டுகளை இணைத்து பிரச்சனையற்ற வங்கி சேவைகளை தொடருமாறு எங்கள் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு செய்யவில்லை என்றால் பான் கார்டினை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் குறிப்பிட்ட வங்கி சேவைகளை பெற பான் கார்டினை பயன்படுத்த முடியாத நிலை வாடிக்கையாளார்களுக்கு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இதனை தெரிவித்துள்ளது அந்த வங்கி.
பான் கார்டுடன் ஆதாரை நீங்கள் இணைக்க விரும்பினால் incometaxindiaefiling.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும். பிறகு லிங் ஆதார் என்று இடதுபுறம் குறிப்பிடப்பட்டிருக்கும் பேனிற்கு செல்லவும்.
பான் - ஆதார் இணைப்பது எப்படி?
incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தில் லாக்-இன் செய்யவும்
உங்களின் பான் அட்டை எண் தான் உங்களின் யூசர் ஐடியாக இருக்கும்
யூசர் ஐடி கொடுத்த பிறகு ஆன்லைனில் உங்களின் பாஸ்வேர்ட் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.
பிறகு ப்ரோபைல் செட்டிங்கிற்குள் சென்று லிங் ஆதார் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்
உங்களின் பான் கார்ட் தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கும். அதனை சரிபார்த்த பிறகு உங்களின் ஆதார் எண்ணை உள்ளீடாக கொடுத்து லிங்க் நவ் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
பிறகு ஆதாருடன் பான் இணைக்கப்பட்டதை உறுதி செய்யும் செய்தி டெஸ்க் டாப்பில் பாப் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil