SBI Customer Alert : இ-காமர்ஸ் வெப்சைட்களில் பை நவ் பே லேட்டர் என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் இப்போது பொருட்களை வாங்கிவிட்டு பிறகு பணம் செலுத்தும் நோக்கில் இருந்தால், நீங்கள் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களாக இருந்தால் நீங்கள் கட்ட இருக்கும் மாதாந்திர தவணை இயல்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். டிசம்பர் 1ம் தேதி முதல் இப்படியான பர்ச்சேஸிங்கிற்கு ரூ. 99-ஐ ப்ரோசசிங் கட்டணமாகவும், வரியையும் எஸ்.பி.ஐ. பிடிக்கிறது.
அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற அனைத்து இ -காமர்ஸ் சைட்களிலும் நீங்கள் தவணை முறையில் பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, மொத்த விற்பனை நிலையத்தில் நீங்கள் தவணை முறையில் பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் இந்த கட்டணம் பொருந்தும்.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ. தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் இன்று முதல் “டிசம்பர் 1 முதல் ப்ரோசசிங் கட்டணம் ரூ. 99 + வரி ஆகியவை அனைத்து தவணை முறையில் பொருட்கள் வாங்குவதற்கான பணப்பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும்” என்று கூறியுள்ளது. டிசம்பர் 1 முதல் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் தேதிக்கு முன் வாங்கியவற்றுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக இணைய தளங்களில் இந்த ப்ரோசசிங் கட்டணம் குறித்து அறிவிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஆன்லைன் இல்லாமல் நேரடியாக கடைகளில் இருந்து வாங்கும் பொருட்களின் இ.எம்.ஐ.க்கான ப்ரோசசிங் கட்டணம் குறித்து கட்டண ரசீதுகளில் குறிப்பிடப்படும் என்றும் அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ. வங்கி.
EMI பரிவர்த்தனை தோல்வியுற்றால், செயலாக்கக் கட்டணம் மாற்றியமைக்கப்படும். EMI பரிவர்த்தனைகளை முன்கூட்டியே முடிக்கும் பட்சத்தில் இந்த ப்ரோசசிங் கட்டணம் மாற்றி அமைக்கப்படாது. மேலும் இதற்கு ரிவார்டிங் புள்ளிகளும் கிடைக்காது. . EMI பரிவர்த்தனையுடன் மாதாந்திர SBI கிரெடிட் கார்டு அறிக்கையில் கட்டணம் பிரதிபலிக்கும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil