SBI கஸ்டமர்ஸ்... இதை குறித்து வச்சுக்கோங்க... உங்க குறை தீர்க்க முக்கிய நடவடிக்கை!
எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் ஓ.டி.பி. அடிப்படையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்களில் இருந்து மட்டுமே பணத்தை எடுக்க இயலுமே தவிர மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து பணத்தை எடுக்கும் போது ஓ.டி.பி. அடிப்படையில் பணம் எடுக்கும் முறை செயல்படாது.
SBI Customer Care Number : எஸ்.பி.ஐ வங்கி புதிய உதவி மைய சேவை எண்களை வெளியிட்டுள்ளது. தங்களின் குறைகளை தீர்க்க வாடிக்கையாளர்கள் இனி இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Advertisment
புதிய எண்களை அறிமுகம் செய்த எஸ்.பி.ஐ வங்கி, ”போன் பேங்கிங் முன்பை விட சிறப்பாக மாறிவிட்டது. எஸ்.பி.ஐ. உதவி மையமும் மிகவும் எளிமையான எண்ணை உதவி மைய எண்ணாக மாற்றியுள்ளது. எஸ்.பி.ஐ. வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த எண்களை வாடிக்கையாளர்கள் இனி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எஸ்.பி.ஐ. தன்னுடைய ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ தற்போது அறிவித்துள்ளது டோல்ஃபிரீ எண் எனவே வாடிக்கையாளர்கள் இலவசமாக உதவி மையத்தை அணுகி தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக் கொள்ள இயலும். டோல்ஃபிரீ எண் மட்டும் இன்றி பேங்கிங் சேவைகளை மேலும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் இதர சேவைகளையும் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. உங்களின் அவசர உதவிகளுக்கு இனி நீங்கள் எஸ்.பி.ஐயின் உதவி மையத்தை 1800 1234 என்ற இந்த எண்கள் மூலம் அணுக முடியும்.
எஸ்.பி.ஐ. சமீபத்தில் ஒ.டி.பி. அடிப்படையில் ஏ.டி.எம்.-ல் இருந்து பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்தது. முன்பு எப்போதைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் தற்போது எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க இயலும். மோசடிக்காரர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பது தான் எங்களின் முக்கிய கடமை என்று சமீபத்தில் இது தொடர்பாக ட்வீட் ஒன்றையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நினைவில் கொள்ளுங்கள், எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் ஓ.டி.பி. அடிப்படையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்களில் இருந்து மட்டுமே பணத்தை எடுக்க இயலுமே தவிர மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து பணத்தை எடுக்கும் போது ஓ.டி.பி. அடிப்படையில் பணம் எடுக்கும் முறை செயல்படாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil