உங்கள் சேமிப்பை பாதுகாக்க, இந்த மெசேஜ் வந்தால் உடனே டெலிட் பண்ணுங்க – எஸ்.பி.ஐ. எச்சரிக்கை

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஏடிஎம் எண், CVV, PIN நம்பர் போன்ற தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என வங்கி எச்சரித்துள்ளது.

sbi pension seva

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தொடர்ந்து தனது சேவையினை, வாடிக்கையாளர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், பல டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்பதே கிடையாது. இதனால் பண மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

“மின்னஞ்சல்/எஸ்எம்எஸ்/அழைப்புகள் அல்லது லிங்க்குகள் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை எஸ்பிஐ கேட்காது. இதுபோன்ற மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்கள் report.phishing@sbi.co.in அல்லது 155260 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்” என எஸ்பிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், பரிசுப் பொருட்களை தருகிறோம் பணம் தருகிறோம் என வரும் குறுஞ்செய்திகளில் இருக்கும் லிங்க்களிடம் இருந்து விலகியே இருங்கள் என்றும் அத்தகைய லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய ஃபிஷிங் லிங்க்குளை கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட மற்றும் முக்கிய தகவல்கள் திருடுபோகலாம் என்றும் எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

ஃபிஷிங் என்பது இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம், ஒரு நம்பகமான நிறுவனம் போன்று ஏமாற்றி, பயனர் பெயர், பாஸ்வர்டுகள், PIN, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற தகவல்களை பெற முயற்சிக்கும் ஒரு வழி.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் எண், CVV, PIN நம்பர் போன்ற தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது. இதுபோன்ற தகவல்களை கேட்டு வரும் எஸ்எம்எஸ்களை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஃபிஷிங் தாக்குதல்கள் நடைபெறும் செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்.

நெட் பேங்கிங் பயனர் ஒரு முறையான இணைய முகவரியிலிருந்து ஒரு மோசடி இமெயிலை பெறுகிறார்.

இந்த இமெயில் பயனரை மின்னஞ்சலில் வழங்கப்பட்ட ஒரு ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்ய சொல்கிறது

இந்த லிங்க்கை கிளிக் செய்தால் அது போலியான எஸ்பிஐ வலைதளத்திற்கு செல்லும். இது எஸ்பிஐயின் ஒரிஜினல் வலைதளம் போலவே இருக்கும்.

வழக்கமாக, மின்னஞ்சல் வெகுமதியை அளிப்பதாகவும் அல்லது இணங்காததால் வரவிருக்கும் அபராதம் பற்றி எச்சரிக்கிறது.

பிறகு உள்நுழைவு/சுயவிவரம் அல்லது பரிவர்த்தனை பாஸ்வோர்டு மற்றும் வங்கி கணக்கு எண்கள் போன்ற இரகசிய தகவல் போன்றவை பயனரிடம் கேட்கப்படும்.

பயனர் விவரங்களை வழங்கியவுடன் Submit பட்டனை கிளிக் செய்கிறார்.

பிறகு ஒரு Error Page காட்டப்படும்

இப்போது பயனர் ஃபிஷிங் தாக்குதலுக்கு உள்ளானார்.

எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எஸ்பிஐ எச்சரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi customer phishing attack delete these fraud msg

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com