இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகளவில் நடைபெறுகிறது. எனவே, அதனை தடுக்கும் பொருட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 'Yeh Wrong Number Hai' என்கிற திட்டத்தை எஸ்பிஐ தொடங்கியுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, மோசடி கும்பலின் மெசேஜ் அமைப்புகளை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.
"Dear client, Your SBI Bank documents are no longer valid. Within 24 hours, your account will be blocked. Please update your KYC on the URL provided" என்று எஸ்பிஐ வங்கியில் இருந்து அனுப்புவது போலவே மோசடி கும்பல் அனுப்பவார்கள்.
இதனை சுட்டிக்காட்டிய எஸ்பிஐ வங்கி, ஒருபோதும் வங்கியில் இருந்து மெசேஜ் வழியாக இந்த லிங்கை கிளிக் செய்து kYC அப்டேட் அ செய்யுங்கள் என கேட்கப்படாது என தெரிவித்தது.
Here is an example of #YehWrongNumberHai, KYC fraud. Such SMS can lead to a fraud, and you can lose your savings. Do not click on embedded links. Check for the correct short code of SBI on receiving an SMS. Stay alert and stay #SafeWithSBI.#SBI #AmritMahotsav pic.twitter.com/z1goSyhGXq
— State Bank of India (@TheOfficialSBI) March 4, 2022
மேலும், இத்தகைய எஸ்எம்எஸ் மோசடி உங்கள் சேமிப்பை இழக்க நேரிடும். லிங்க் கிளிக் செய்யுங்கள் என ஒருபோதும் கேட்கப்படாது. உங்களுக்கு SMS வருகையில், சரியான SB ஷாட்கோட் இருக்கிறதா என்பதை செக் செய்யுங்கள். விழிப்புடன் இருங்கள் #SafeWithSBI." என தெரிவித்துள்ளனர்.
மோசடி கும்பல் அனுப்பும் மெசேஜில் உள்ள லிங்க் ஆப்ஷன், பணத்தை கணக்கில் இருந்து சுருட்டுதவற்கான கதவாகும். எளிதாக, அவ்வழியாக பெரிய அளவிலான பணம் பரிமாறப்படலாம் என அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில், மோசடி கும்பல் ஓடிபி நம்பர் கேட்டு பணத்தை சுருட்டுவார்கள். யார் கேட்டாலும் ஓடிபி நம்பரை ஷேர் செய்யாதீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.