scorecardresearch

SBI Alert: இந்தத் தேதிக்குள் இதை செய்தே ஆகணும்… எஸ்.பி.ஐ முக்கிய எச்சரிக்கை!

எஸ்பிஐ வங்கி தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

SBI Alert: இந்தத் தேதிக்குள் இதை செய்தே ஆகணும்… எஸ்.பி.ஐ முக்கிய எச்சரிக்கை!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கைாளர்கள் மார்ச் மாத இறுதிக்குள் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையெனில், வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை தடையின்றி தொடர, ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்ச் 31 2022க்கு பிறகு, பான் எண் இணைக்கப்பட்டால், அவை செலுப்படியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் எளிய வழிமுறை

  • முதலில் வருமான வரித்துறை பக்கத்திற்கு செல்ல வேண்டும்
  • அதில், Link Aadhaar கிளிக் செய்ய வேண்டும்
  • தொடர்ந்து, பான், ஆதார் நம்பர், பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்
  • இறுதியாக Link Aadhaar கொடுத்தால் போதும், பான் ஆதார் லிங்க் ஓவர்.

பின்னர், வருமான வரித்துறை உங்களது தகவல்களை சரிபார்த்து ஆதாருடன் பான் எண் லிங்க் சக்சஸ் ஆகும். ஜனவரி 24 2022 இன்படி, சுமார் 43 கோடி பேர் ஆதாருடன் பான் எண்ணை இணைத்துள்ளனர்.

பெருந்தோற்று காரணமாக, ஆதார்- பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 2021-வுடன் முடிவடைய இருந்த நிலையில், மார்ச் 31 2022 வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்ட திட்டங்களுக்கான வட்டியை அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi customers alert do this immediately to avoid inconvenience