SBI customers alert : கொரோனா வைரஸ் மத்தியில் ஆன்லைன் பேங்கிங் எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது என்பதை நாம் அனைவருமே தற்போது உணர்ந்திருக்கும் தருணம் இது. பல வங்கிகள் அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்கி வருகிறது. மக்கள் வங்கிகளுக்கு வருவதை பெரும்பாலும் தவிர்க்க தேவையான அனைத்து நடைமுறைகளையும் டிஜிட்டல் உதவி மூலம் நிறைவேற்றி வருகிறது.
தற்போது நீங்கள் புதிய ஏ.டி.எம். கார்டை பெறக் கூட வங்கிகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே உங்களின் உங்களின் ஏ.டி.எம். கார்டுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நாம் தற்போது பார்க்கலாம்
உங்களின் அலைபேசி எண் உங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்போது தான் உங்களால் ஓ.டி.பியை பெற இயலும்.
எஸ்.பி.ஐ. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
அதில் இ-சேவைகளை தேர்வு செய்யுங்கள்
பிறகு ஏ.டி.எம். சேவைகளை தேர்வு செய்யவும்
OTP-based மற்றும் profiles password-based என்ற இரண்டு தேர்வுகளை உன் முன் வைக்கும். நீங்கள் ஓ.டி.பியை தேர்வு செய்வது அவசியம்.
புதிய பாப் அப் உருவாகும். அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான ஏ.டி.எம். கார்ட் சேவைகளை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு அனைத்து தகவல்களையும் உள்ளீடாக தர வேண்டும்.
பிறகு அடுத்த 7-8 வேலை நாட்களில் உங்களுக்கு ஏ.டி.எம். கார்ட் கிடைக்கும் என்ற குறுஞ்செய்தி கிடைக்கும்.
உங்களின் வங்கிக் கணக்கில் நீங்கள் கொடுத்த முகவரிக்கு ஏ.டி.எம். கார்ட் அனுப்பி வைக்கப்படும்.
நீங்கள் வேற முகவரிக்கு ஏ.டி.எம். கார்டை அனுப்ப விரும்பும் பட்சத்தில் மட்டுமே வங்கி கிளையை அணுகலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil