இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு இமெயில் வாயிலாக எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு பிரிவினர், ஸ்கீரின் ஷேரிங் வசதி மூலம் உங்கள் கணக்கில் இருந்து மோசடி கும்பல் எவ்வாறு பணத்தை சுருட்டுகிறார்கள் என்பதை விவரித்துள்ளனர்.
அந்த மெயிலில், ஆன்லைன் மோசடிதாரர்கள் ஸ்கீரின் ஷேரிங் வசதியை புதிய மோசடி டெக்னிக்காக கையில் எடுத்துள்ளனர். உங்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை திருடுகின்றனர். உங்களை மூன்றாம் தரப்பு செயலியை பதிவிறக்கம் செய்யவைத்து, உங்கள் ஸ்மார்ட்போனின் முழு கன்ட்ரோலையும் பெற்றுவிடுவார்கள்.
சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி போலவே உங்களை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தப்படியே பிரச்னையை தீர்க்க ஸ்கீரின் ஷேரிங் செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்துவார்கள். நீங்கள் செயலியை ஓபன் செய்ததும், உங்கள் சாதனத்தின் முழு கன்ட்ரோலையும் பெற்று, தனிப்பட்ட தகவல்களை எளிதாக எடுத்துவிடுவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
வங்கி சார்பில் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு எவ்வித அறிவுறுத்தல்களும் வராது என்றும், அத்தகைய முறையில் யாராவது உங்களை தொலைப்பேசி அழைப்பு, மெசேஜ், மெயில் வழிகளில் தொடர்பு கொண்டால், ரெஸ்பான்ஸ் செய்யாதீர்கள் என தெரிவித்துள்ளது.
மேலும், கிரெடிட் கார்டின் காலாவதி தேதி, சிவிவி, ஓடிபி, பின் நம்பர் போன்றவற்றை யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் எனவும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil