எஸ்.பி.ஐ வங்கியில் ப்ரோசசிங் கட்டணமே இல்லாமல் வீட்டுக்கடன் வாங்குவது எப்படி?

SBI customers get home loans with zero processing fee: செயலாக்க கட்டணம் இல்லா கடன்களை 7208933140 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து அல்லது எஸ்பிஐ யோனோவில் உள்நுழைவதன் மூலம் எளிதாக பெறலாம்

SBI Bank Alert Tamil News

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது. புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, எஸ்பிஐ ஒரு சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளதால் புதிய வீடுகளுக்கான தேடல் இந்த சுதந்திர தினத்துடன் முடிவடைகிறது.

இந்த சலுகையின் கீழ், ஒருவர் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியிலிருந்து வீட்டுக் கடனைப் பெறலாம், அதுவும் எந்த செயலாக்கக் கட்டணமும் இல்லாமல். எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் அல்லது 7208933140 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து இந்த சலுகையைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, ஒருவர் homeloans.sbi என்ற இணைய தள பக்கத்தை பார்வையிடலாம்.

சமீபத்தில், எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து பூஜ்யம் செயலாக்க கட்டண வீட்டுக் கடன் குறித்து ட்வீட் செய்துள்ளது. எஸ்பிஐயின் சமீபத்திய ட்வீட்டில், “இந்த சுதந்திர தினத்தன்று, வீட்டுக் கடன்களில் ஜீரோ* செயலாக்கக் கட்டணத்துடன், உங்கள் கனவு இல்லத்திற்குள் செல்லுங்கள். இப்போது விண்ணப்பிக்கவும்: sbiyono.sbi.”

இந்த செயலாக்க கட்டணம் இல்லா கடன்களை 7208933140 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து அல்லது எஸ்பிஐ யோனோவில் உள்நுழைவதன் மூலம் கடன் பெறலாம். எஸ்பிஐ யோனோ செயலியை இன்னும் பதிவிறக்கம் செய்யாதவர்கள் பூஜ்ஜிய செயலாக்க வீட்டுக் கடனைப் பெற அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் பதிவிறக்கம் செய்ய எஸ்பிஐ யோனோ ஆப் கிடைக்கிறது.

Homeloans.sbi படி, இந்த வீட்டுக் கடனைப் பெற ஒருவர் 1800 11 2018 ஐ அழைக்கலாம். இந்த சிறப்பு சலுகைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2021.

இந்த வீட்டுக் கடனுக்கான சலுகைகள் பின்வருமாறு:

1) பூஜ்ஜிய செயலாக்க கட்டணம்

2) பெண்களுக்கு 5 BPS வட்டி சலுகை

3) யோனோ வழியாக 5 பிபிஎஸ் வட்டி கட்டுப்பாடு

4) 6.70 சதவிகிதம் முதல் குறைந்த வட்டி விகிதங்கள்

இந்த சலுகையைப் பெறுவதற்கு, எவரும் அதிக நேரத்தை வீணாக்கக் வேண்டாம். உடனே SBI YONO இல் உள்நுழையுங்கள் அல்லது 7208933140 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். விவரங்களுக்கு, homeloans.sbi என்ற இணையதளத்தை பார்வையிடுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi customers get home loans with zero processing fee

Next Story
அவசர தேவைக்கு பர்சனல் லோன் வாங்கணுமா? தனியார் வங்கிகள் வசூலிக்கும் வட்டி எவ்வளவு?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express