நம்மில் சிலர் ஏடிஎம்க்கு பணம் எடுக்க சென்று, ஏடிஎம் அறைக்குள் நுழைந்தவுடன் தான் ஏடிஎம் கார்டை வீட்டிலே மறந்து வைத்துவிட்டு வந்ததை நினைப்பார்கள். இதனால் பணம் எடுக்க முடியாமல் சிரமங்களை சந்தித்தனர். கவலை வேண்டாம், இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்குகிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க டெபிட் கார்டு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்மில் இருந்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கக்கூடிய புதிய வங்கி வசதியை எஸ்பிஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏடிஎம்/டெபிட் கார்டு இல்லாமல் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் SBI YONO ஐப் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் எந்த எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்தும் பணம் எடுக்கலாம். மேலும், பிஓஎஸ் டெர்மினல்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் (சிஎஸ்பி) ஆகியவற்றிலும் எஸ்பிஐ யோனோ ஆப் சிறப்பாகச் செயல்படுகிறது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் YONO செயலியைப் பயன்படுத்தி SBI ATM களில் இருந்து குறைந்தபட்சம் ரூ 500 முதல் அதிகபட்சம் ரூ 10,000 வரை பணம் எடுக்கலாம்.
எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?
படி 1: உங்கள் மொபைலில் YONO செயலியை பதவிறக்கம் செய்து, அதில் உள்நுழையவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள YONO Cash என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: YONO Cash இன் கீழ் ATM பிரிவில் கிளிக் செய்யவும்.
படி 4: தேவையான தொகையை பதிவிட்டு உள்ளிடவும்.
படி 5: அடுத்ததாக 6 இலக்க பின்னை உருவாக்கவும்.
படி 6: நீங்கள் பின்னை உருவாக்கியதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு YONO பணப் பரிவர்த்தனை எண் வரும். இந்த எண்ணை 6 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
படி 7: இப்போது ஏடிஎம்மில் உள்ள யோனோ கேஷ் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 8: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட YONO பணப் பரிவர்த்தனை எண்ணையும் நீங்கள் உருவாக்கிய 6 இலக்க பின்னையும் உள்ளிடவும்.
படி 9: இந்த செயல்முறை முடிந்ததும், நீங்கள் இப்போது ஏடிஎம்மில் இருந்து பணத்தைப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil